Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குபேரன் வழிபட்ட தஞ்சபுரீஸ்வரர் ... ஒரே நேரத்தில் 5 கோவில்களில் மகாகும்பாபிஷேக விழா ஒரே நேரத்தில் 5 கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
வைத்தீஸ்வரன் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

07 பிப்
2022
03:02

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனுறை ஆகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசுவாமி தையல்நாயகி அம்மன் விநாயகர் செல்வ முத்துக்குமாரசாமி அங்காரகன் செவ்வாய் தன்வந்திரி ஆகிய தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் இந்நிலையில் செல்வ முத்துக்குமார சாமிக்கு தைமாத உற்சவத்தை முன்னிட்டு கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது அதனைத் தொடர்ந்து தினமும்   செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு யானை வாகனம், வெள்ளி இடும்பன் வாகனம் ,காமதேனு வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதிஉலா காட்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது .முன்னதாக வள்ளி தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் செல்வமுத்துக்குமாரசாமி எழுந்தருளினார். பின்னர் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை நான்கு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar