Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ஏடு ... திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வைரவேல் காணிக்கை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணத்தில் மாசி மக விழா: 6 சிவாலயங்களில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
கும்பகோணத்தில் மாசி மக விழா: 6 சிவாலயங்களில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

08 பிப்
2022
03:02

தஞ்சாவூர்: கும்பகோணத்தில், வரும் 17ம் தேதி, நடைபெறும் மாசிமக விழாவிற்காக, ஆறு சிவாலயங்களில் கொடியேற்றம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், மாசிமக திருவிழா, வரும் 17 ம் தேதி நடக்கிறது. இதற்காக, ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய, ஆறு சிவலாயங்களில் நேற்று இரவு பூர்வாங்க பூஜை செய்யப்பட்டு, இன்று (08ம் தேதி ) காலை, கொடியேற்றம் நடைபெற்றது. மாசி மகத்திற்கு முதன்மையாக விளங்கும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில், கொடி மரம் முன் எழுந்தருளினர். அப்போது வேத பாராயணம், திருமுறைகள், சிறப்பு நாதஸ்வரம் முழங்க, 10 நாள் உற்சவ விழாக்கு கொடியேற்றப்பட்டது.  

தொடர்ந்து இரவு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்தி சுவாமிகள் இந்திர விமானத்தில் வீதியுலா, 11ம் தேதி 63 நாயன்மார்கள் வீதியுலா, 12ம் தேதி ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 15ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதை போல 16ம் தேதி அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழ சோமேஸ்வரர் ஆகிய 4 கோவில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 17ம் தேதி, மகாமகம் குளத்தில், மதியம் 12:00 மணிக்கு மேல், 1:00 மணிக்குள், மாசிமக தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது. அப்போது. 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள், மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர்.
 
வைணவ தலங்களில் கொடியேற்றம்: மாசி மகத்தை முன்னிட்டு வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி கோவில், ராஜகோபாலசுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில், 10 நாள் உற்சவம்,  நாளை (9ம் தேதி) காலை, கொடியேற்றப்படுகிறது. வரும் 12ம் தேதி கருட வாகனங்களில் ஓலைச்சப்பரமும், பிப்.17ம் தேதி சக்கரபாணி கோவில் தேரோட்டமும்,  சாரங்கபாணி பெருமாள் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெங்களூரு: கர்நாடக இசையுலகின் பிதாமகர்களாகப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: ஆற்காடு குப்பம் சோழீஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ், 103 கோடி ரூபாயில், ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar