Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி மகத்தில் நீராட வேண்டிய தலங்கள்! மாசிமகத்தில் விளக்கு ஏற்றுங்க! மாசிமகத்தில் விளக்கு ஏற்றுங்க!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்திரனே ஈசனுக்கு எடுக்கும் விழா!
எழுத்தின் அளவு:
இந்திரனே ஈசனுக்கு எடுக்கும் விழா!

பதிவு செய்த நாள்

15 பிப்
2022
05:02

இந்திரனே ஈசனுக்கு எடுக்கும் விழாவிற்கு இந்திரப் பெருவிழா என்று பெயர். திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத  அகோரமூர்த்தி ஆலயத்தில் இவ்விழா மாசி வளர்பிறையில் நடக்கிறது. இதை இந்திரனே நடத்தி வைப்பதாக ஐதீகம். இவ்விழாவில்  சுவாமி காவிரி சங்கமத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். இதுவன்றி வாரம்தோறும் ஞாயிறன்று அகோரமூர்த்திக்கு சிறப்பு  அபிஷேகம் நடைபெறும். இத்தலத்தில் மட்டுமே ஐந்து முகம் கொண்ட பஞ்சமூர்த்தியாக அகோர சிவன் காட்சி தருகிறார். சோழர்  காலத்தில் ஐம்பொன் விக்ரகங்களை உருவாக்கும் தொழிற்கூடமாக இது இருந்துள்ளது. சீர்காழியிலிருந்து 10 கி.மீ., தூரத்தில் இத்தலம்  அமைந்துள்ளது.

குந்தியும், மாசிமகமும்: குந்திதேவிக்கு, சூரியன் மூலமாக கர்ணன் அவதரித்தான். திருமணமாவதற்கு முன் கர்ணனைப் பெற்ற  குந்திதேவி, குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். அந்தப் பாவம் அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நாள்  ஒரு முனிவரைச் சந்தித்த குந்தி, கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்க பரிகாரம் கேட்டாள். அதற்கு முனிவர், மாசி மகம் அன்று ஏழு  கடலில் நீராடினால் பாவம் விலகும் என்றார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும்? என்று இறைவனை வேண்டினாள்  குந்தி. அப்போது, திருநல்லூர் கோயில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் உனக்காக ஏழு கடல் தீர்த்தங்களை வரவழைக்கின்றேன்.  அந்தத் தீர்த்தத்தை ஏழு கடலாக நினைத்து மாசி மகம் அன்று நீராடு! என்று அசரீரி கேட்டது. குந்தியும் அப்படியே செய்து விமோசனம்  பெற்றாள். அந்தத் தீர்த்தமே சப்த சாகர தீர்த்தம் ஆகும். இத்திருத்தலம், தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருநல்லூரில் உள்ள  பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் ஆகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar