Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் திருவிழாவுடன் களைகட்டிய ... பழநியில் பக்தர்கள் கூட்டம்: காத்திருந்து தரிசனம் பழநியில் பக்தர்கள் கூட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி ஆழித்தேரோட்ட விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி ஆழித்தேரோட்ட விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2022
06:02

திருவாரூர் : உலக பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா வரும் மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி இன்று திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.     

சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும்இ பூமியில் தோன்றிய முதல் ஊர் என அழைக்கப்படும் திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா தொடக்கமாக இன்று காலை ஆலயத்தின் பிரதான பிரகாரத்தில் உள்ள கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலை ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்து மூலவர் ஸ்ரீவன்மீகநாதர் சன்னதி எதிரே வந்தப்பின் 54 அடி உயரம் கொண்ட கொடிமரத்தின் பீடத்தினை சுற்றியுள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு திரவியம், மஞ்சள், பால், சந்தனம் முதலான நறுமண திரவியப் பொருட்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடைப்பெற்றன. தொடர்ந்து ரிஷபம் படம் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் பங்குனி உத்திரப் பெருவிழா துவக்கத்தை அறிவிக்கும் வகையில்  கொடிமரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரந்திற்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. இந்த திருவிழாவின் முக்கிய விழாவான வரும் மார்ச் 15ஆம் தேதி உலக புகழ்பெற்ற ஆழித்தேரோட்ட விழா நடைபெறுகிறது. இன்று காலை நடைப்பெற்ற  கொடியேற்ற விழாவில் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டரை்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar