Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருமத்தம்பட்டிக்கு வந்த ஆதியோகி ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக விடையாற்றி உற்சவம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 பிப்
2022
11:02

சென்னை, : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான இன்று, காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 22ம் தேதி கருட சேவை உற்சவம் நடந்தது. 23ம் தேதி சூரிய, சந்திர பிரபை புறப்பாடு நடந்தது. 24ம் தேதி பல்லக்கு நாச்சியார் கோலத்தில், சுவாமி புறப்பாடு நடந்தது.ஆறாம் நாள் விழாவான நேற்று, காலை 5:15 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, ஆனந்த விமானத்தில் பார்த்தசாரதி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு, யானை வாகன புறப்பாடு நடந்தது. பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான இன்று, தேர் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை, பார்த்தசாரதி பெருமாள் சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரை வடம் பிடிக்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நாளை காலை 6:30 மணிக்கு, வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரமும், இரவு குதிரை வாகன சேவையும் நடக்கிறது. 28ம் தேதி பகல் 11:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. மார்ச் 1ம் தேதி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar