மாசி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி கடலில் குவிந்த பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2022 03:03
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பின் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து விட்டு சிவசிவ என கோஷமிட்டபடி அக்னி கடலில் புனித நீராடினார்கள். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். பின் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மாலை 2:30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளியதும், மகா தீபாராதனை நடந்தது. பின் பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.