திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2022 05:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது. பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணபொய்கை கொண்டு செல்லப்பட்டார். ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது. மலைக்கு பின்புறம் எழுந்தருளியுள்ள பால் சுனை கண்ட சிவபெருமான், பால திரிபுர சுந்தரி அம்மன்க்கு அபிஷேகங்கள் முடிந்து அலங்காரமாகி பூஜை, தீபாராதனை நடந்தது.