* ‘நான்’ என்னும் அகந்தையை கைவிடுங்கள். மகிழ்ச்சியாக வாழலாம். * பல சாதனைகளை புரியவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார். * பெற்றோரை சந்தோஷப்படுத்து. கடவுளும் மகிழ்ச்சி அடைவார். * என்னால் எதையும் செய்ய முடியும் என நம்பு. * பிறரது விமர்சனத்தை பொருட்படுத்தாமல் கடமையில் கண்ணாக இரு. * ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடு. அது வளமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும். * மரணத்திற்கு பின்பும், நல்ல ஒழுக்கமே உன்னைத் தொடரும். * நியாயத்தை சொல்வதில் கோழையாக இருக்காதே. அதற்காக சண்டையிடவும் தயங்காதே. * பிறரது பாராட்டு, விமர்சனத்தை கேட்டால், உன்னால் மகத்தான செயல்களை செய்ய முடியாது. * ஒன்றைப் பெற்றுக் கொள்வதில் பெருமையில்லை. கொடுப்பதே உண்மையான பெருமை. * எப்போதும் பிறரை குறை கூறிக்கொண்டே இருப்பவனிடம் சேராதே. * தாழ்ந்த நிலையில் இருந்து மேலான நிலைக்குப் பயணம் செய்வதே வாழ்வின் நோக்கம் * உன்னை நீ வெறுத்தால் அழிவை நோக்கி செல்வதாக அர்த்தம். * தவறுக்காக வருந்தாதே. அதுவே உனக்கு வழிகாட்டும் தெய்வம். * வீணான பொழுது போக்குகளில் ஈடுபட்டால், மனதின் ஆற்றல் சிதறடிக்கப்படும். * பொறுமையாக இருப்பதே வெற்றிக்கான அடிப்படை என்பதை அறிந்துகொள். * மனவலிமையும், இரக்க குணமும் கொண்டவனே உண்மையான வீரன். * உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது. - விவேகானந்தர்