சிவனருள் பெற எட்டு விரதங்கள் மேற்கொள்வர். 1. சோமவார விரதம் – திங்களன்று இருக்கும் விரதம்; கார்த்திகை மாதத்தில் சிறப்பு 2. உமாமகேஸ்வர விரதம் – கார்த்திகை மாத பவுர்ணமி இருக்கும் விரதம் 3. திருவாதிரை விரதம் – மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனத்தன்று இருப்பது 4. சிவராத்திரி விரதம் – மாசி மாத அமாவாசைக்கு முந்திய நாளில் வருவது 5. கல்யாண விரதம் – பங்குனி உத்திரத்தன்று கடைபிடிக்கும் விரதம் 6. பாசுபத விரதம் – தைப்பூச நாளில் வரும் விரதம் 7. அஷ்டமி விரதம் – வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று இருக்கும் விரதம் 8. கேதார கவுரி விரதம் – ஐப்பசி அமாவாசையன்று (தீபாவளியன்று) இருக்கும் விரதம்