கோயில், நதிக்கரை, கோசாலை, மகான்களின் சமாதி போன்றபுனிதமான இடங்களில் தீபமேற்றி வழிபட்டால், ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும். மனதில் சாந்தியும்,புத்தியில் தெளிவும் பிறக்கும். தீபமேற்றும்போது, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஏற்றுவது விசேஷமானது.அக்னிர் ஜ்யோதீ ரவி ஜ்யோதிஷ் சந்த்ரோஜ்யோதிஸ் ததைவசஉத்தம: ஸர்வஜ்யோதீநாம் தீபோயம் ப்ரதி க்ருஹ்யதாம்ஸ்லோகம் சொல்ல முடியாதவர்கள், நெருப்பு, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று ஒளிகளில் சிறந்ததான இந்த தீபத்தின் ஒளியை, தங்களுக்கு (கடவுளுக்கு) சமர்ப்பிக்கிறேன். கருணையுடன் இதை ஏற்றுக் கொண்டு அருள்புரிய வேண்டும் என்று சொல்லி வணங்க வேண்டும்.