ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மத்திய எஃகு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.
மத்திய எஃகு துறை அமைச்சர் ராமச்சந்திரபிரசாத் சிங் மற்றும் எஃகு, ஊரக வளர்ச்சி துறை இணை அமைச்சர் பக்கன்சிங் குலஸ்தே இருவரும் தங்களது குடும்பத்தினருடன் நேற்று காலை ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். அமைச்சர்களை கோயில் அதிகாரிகள் வரவேற்று சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் இரு அமைச்சர்களும் குடும்பத்தினரும் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின் கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின் இரு அமைச்சர்களும் குடும்பத்துடன் காரில் தனுஷ்கோடி கடற்கரை, கோதண்டராமர் கோயில், பர்வதம் ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.