திருப்புல்லாணியில் பங்குனி விழா: மார்ச் 10ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2022 03:03
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனித் தாயார் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ விழா மார்ச் 10 காலை 9:00 மணி அளவில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. மார்ச் 9 அன்று இரவு 7:00 மணி அளவில் அனுக்ஞை பூஜையுடன் துவங்கி, தொடர்ந்து மார்ச் 21 வரை விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம், மண்டகப்படி பூஜைகள், வெளிப் பிரகார வீதிஉலா உள்ளிட்டவைகளுடன் நடக்க உள்ளது.வருகிற மார்ச் 18 காலை 9:00 மணிக்கு மேல் பெரிய தேரில் உற்ஸவ மூர்த்திகளின் நான்கு ரத வீதி உலா புறப்பாடு நடக்க உள்ளது.