திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முகூர்த்தகால்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2022 04:03
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 8ல் கொடியேற்றத்துடன் தொடங்கும் பங்குனி திருவிழாவிற்கான முகூர்த்தகால் ஊன்றும் விழா நேற்று நடந்தது. முகூர்த்தகாலுக்கு பூஜை, தீபாராதனை முடிந்து கோயில் முன்பு ஊன்றப்பட்டது. சிவாச்சாரியார்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.