பிரசித்தி பெற்ற பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2022 10:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், கடந்த, 15ம் தேதி கம்பம் நட்டு நோன்பு சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்வான மாரியம்மனுக்கும், சூலத்தேவருக்கும் திருக்கல்யாண உற்சவம் கடந்த, 2ம் தேதி நடைபெற்றது. விழாவையொட்டி, நேர்த்திக்கடனை செலுத்த பக்தர்கள் பூவோடு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். நேற்றுமுன்தினம் மஞ்சள் நீராடுதல், அம்மன் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திருவிழாவின் இறுதி நாளான நேற்று மாரியம்மனுக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.