Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் பக்தர்கள் கூட்டம் ஆனந்தாயி கோவிலில் தெப்பத்திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் செப்பு தங்க வளையல் காப்பு கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2022
03:03

மாளிகைமேடு:  அகழ்வாராய்ச்சியில் செப்பு தங்க வளையல் காப்பு கண்டெடுப்பு பெரம்பலுார், மார்ச்.5- மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியின்போது, செப்பு தங்க வளையல் போன்ற காப்பு கண்டெடுக்கப்பட்டது. அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் கல்வெட்டு ஆதாரங்களின் உதவியுடன் மாளிகைமேடு தொல்லியல் தளத்தில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட அகழ்வாராய்ச்சியில் செங்கல் அமைப்பு மற்றும் ஏராளமான அலங்கரிக்கப்பட்ட கூரை ஓடுகள் வடிவில் அரண்மனையின் கட்டமைப்பு எச்சங்கள் கண்டறியப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி புதிய சுற்று தோண்டும் பணி தொடங்கியது பத்துக்குப் பத்து சதுர அடியில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியில் பெரிய அளவிலான செங்கற்களால் ஆன சுவர்கள் உள்ள இந்த பகுதியில் சோழர் காலத்து செப்பு தங்க வளையல் போன்ற காப்பு தற்போது கண்டெடுக்கப்பட்டது. 920 கிராம் எடையுள்ள இந்த வளையல் ஏ3/2 நாறபுறத்தில் 170 சென்டி மீட்டர் ஆழத்தில் . 4.9 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 4 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட இந்த வலையில் போன்ற காப்பு உடைந்த நிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. வளையத்தில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. அது துருப்பிடித்த நிலையில் செம்பு படிந்த நிலையில் காணப்பட்டது. இந்த ஆபரணம் சோழ வம்சத்தின் செல்வத்தை குறிக்கின்றது. வரும் மாதங்களில் இதே போன்ற கண்டுபிடிப்புகளை சேர்ப்பது பிராந்தியத்தின் வர்த்தக இணைப்புகள் பொருளாதாரச் செழிப்பு மற்றும் கலாச்சார செல்வத்தை நிறுவ உதவும். இதுவரை தளத்தில் கிடைத்த பழங்கால புற்களில் செப்பு நாணயங்கள் தந்தம் மற்றும் செம்பு பொருட்கள், இரும்பு ஆணிகள் கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள் அலங்கரிக்கப்பட்ட கற்கள் மற்றும் சீன பொருட்கள் ஆகியவை அடங்கும். பீங்கான் மற்றும் செலாடோன் சீனாவுடனான பிராந்தியத்தின் வர்த்தக தொடர்பை குறிப்பதாக சம்பந்தப்பட்ட துறையினர் தெரிவிக்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar