Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் மாசி ... வேம்பத்துார் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் வேம்பத்துார் கைலாசநாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா தொடங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா தொடங்கியது

பதிவு செய்த நாள்

07 மார்
2022
04:03

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்றது நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா. நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா காலை 7 மணிக்கு மேளதாளம் முழங்க தொடங்கியது. பின் சிறப்பு பூஜைகள் நடத்தி கோவில் முன்புள்ள கொடிமரத்தில் அம்மன் உருவத்துடன் உள்ள மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. இதில் கொடிமரம், நாணல் புல், மாவிலை, வண்ணப் பூமாலைகள் இணைத்து மாரியம்மன் உருவம் பொறித்த கொடிமரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, உலுப்பகுடி கூட்டுறவு பால் பண்ணை தலைவர் சக்திவேல், கோவில் செயல் அலுவலர் வாணி மகேஸ்வரி மற்றும் கோவில் பூசாரிகள், விழாக்குழுவினர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 8) அதிகாலையில் நத்தம் அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி, பின் தீர்த்தம் எடுத்துவந்து சந்தனக் கருப்பு சாமி கோவிலில் பக்தர்கள் ஒன்று கூடுவர். அங்கிருந்து பக்தர்களை ஊர்வலமாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவர். பின்னர் மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அக்னிச்சட்டி எடுத்தல் மற்றும் பூக்குழி இறங்குதல் வரும் மார்ச் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் திருக்கோயில் பூசாரிகளும் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar