Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாரியூர் கொண்டத்து காளியம்மன் ... ஆடி மாத முதல் பிரதோஷம் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்! ஆடி மாத முதல் பிரதோஷம் நந்திக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் மொட்டைக்கு அடாவடி வசூல்: அறநிலைய கமிஷனர் எச்சரிக்கை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2012
11:07

விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை விழாவில், மொட்டைக்கு கண்டபடி கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ,என, இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் செந்தில்வேலவன் எச்சரித்துள்ளார். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை , மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைதோப்பு, தேனி மாவட்டம் மாளிகைப்பாறை வழியாக பக்தர்கள் வருகை தருவர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், நேர்த்திக்கடனாக மொட்டை போடுவர். மொட்டைக்கு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.10 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் இதில் முடி சேகரத்திற்கு டெண்டர் எடுப்பவர்கள், குறைந்தது ரூ.100 லிருந்து ரூ.250 வரை கட்டணமாக அடாவடியாக வசூலிக்கின்றனர். கோயில் வரும் ஏழை பக்தர்கள், மொட்டை கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். மேலும் பலர், கட்டணத்தை கட்ட முடியாமல், நேர்த்திக்கடனையும் செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். முடி சேகரத்திற்கு இந்தாண்டு ரூ. 8 லட்சத்து 52 ஆயிரத்திற்கு டெண்டர் எடுக்கப்பட்டு ள்ளது. முடி சேகரிக்க உரிமைக்கு பெற்ற இவர்களுக்கு ,மொட்டை கட்டணம் வசூலிக்க அனுமதி கிடையாது.ஆனால் ஆண்டு தோறும் இதன் டெண்டர் எடுப்பவர்கள், மொட்டைக்கு அடாவடியாக கட்டணம் வசூலிக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் செந்தில்வேலவன் , முடி எடுக்க 100 நாவிதர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மொட்டை போடும் பணியில் ஈடுபடுபவர்கள் அதிக கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட நாவிதர் வெளியேற்றப்படுவார். மொட்டைக்கு கட்டணமாக ரூ.10 மட்டுமே பக்தர்கள் வழங்க வேண்டும். முடி சேகரம் செய்பவர்களுக்கு மொட்டை போடும் இடத்தில் அனுமதியில்லை. இவர்கள் மாலை நேரத்தில் மட்டுமே முடி சேகரிக்க அனுமதிக்கப்படுவார்கள். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar