திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி கோயிலில் கிழக்கு வாசலில், பெருமாள் சன்னிதிக்கு முன்னால் ஆஞ்சநேயர் சன்னிதி கொண்டிருக்கிறார். இவர் மேல் பூசப்படும் வெண்ணெய் கடும் வெயில் காலத்திலும்கூட உருகுவது இல்லை. அத்துடன் கெட்டுப் போவதும் இல்லை; அந்த வெண்ணெயின் மீது ஈயோ, எறும்போ மொய்ப்பதும் இல்லை. 1934-ல் இந்தக் கோயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டபோதும்கூட, அனுமன் திருமேனியில் இருந்த வெண்ணெய் உருகாமல் கெட்டியாக இருந்தது. இந்த நிகழ்வு, அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தது.