திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில், ராம நதிக்கரையில் காக்கும் பெருமாள் சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. ராமபிரானால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் இந்த ஆற்றங்கரை கோயிலில் பெருமாள் பெயருடன் சாஸ்தா விளங்குவதால் இவருக்கு மகிமை அதிகமாம். எப்படிப்பட்ட துன்பத்தையும் இவரது கருணைப் பார்வை விரட்டிவிடுகிறதாம்.