ஞாயிறு : சுபங்களைத் தரும். திங்கள் : எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். செவ்வாய் : உணவு பஞ்சம் அகலும். புதன் : அகால மரணத்தை விலக்கும். வியாழன் : மனத்துயர் நீக்கும். வெள்ளி : கஷ்டம் நீங்கும். சனி : பதவி உயர்வு பெருமைகள் தரும்.
ஆஞ்சநேயர் ஸ்ரீராமரைத் தவிர வேறு சிந்தனை வேண்டாம் என்பதற்காகவே பிரம்மசாரியாய் இருந்தார். சீதையை அன்னையாக துதித்து சீதைக்கு நிம்மதி தந்தவர். எனவே அவரை வீட்டில் வைத்து பூஜிப்பது நமக்கு நன்மையே தரும்.