Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தலையைத் தொட்டு ஆசீர்வதிப்பது ஏன்? நரசிம்மர் இடுப்பில் கத்தி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மூன்று வகை நீராடல் !
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2022
11:03


நமது வீட்டின் வாயிலை அழகுபடுத்துவதில் கோலம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ, அதேபோன்று நமது உடலையும், உள்ளத்தையும் அழகுபடுத்துவது அதிகாலை நீராடுதல். தூங்கும்போது இந்திரியங்களில் ஏற்படும் அசுத்தி மற்றும் உடல் அசதி நீங்கி, புத்துணர்வு பெற அதிகாலையில் நீராடுதல் நன்று. நீராடலில் மூன்று வகை உள்ளது. அவை 1.ரிஷி ஸ்நானம் (காலை 4 முதல் 5மணி வரை) உத்தமம். 2. மனித ஸ்நானம் (காலை 5 முதல் 6.30 மணி வரை) மத்திமம், 3. ராட்சஷ ஸ்நானம் (காலை 6.30 மணிக்கு மேல்) அதமம். சூரிய உதயத்துக்கு  முன் நான்கு நாழிகைகள் அருணோதயம் எனப்படும். அந்த நேரத்தில் நீராடுவது பிராதஸ்நானம் எனப்படும்.

அதிகாலையில் நீராடுபவர்களுக்கு சரீர அழகு, பலம், சுத்தம், ஆயுள், ஆரோக்கியம், தைரியம் கிடைக்கும். சாஸ்திர விதிப்படி மூன்று வருட காலம் அதிகாலை நீராடுபவருக்கு ஏழு பிறவிகளில் செய்த பாபங்களும் நீங்கும் என்கிறது பராசரஸ்மிருதி. நீராடுவது என்றால், உடனே தண்ணீரில் குதிப்பது என்று பொருளல்ல. எங்கே, எப்படி குளிக்க வேண்டும் என்பதற்கும் விதிகள் இருக்கின்றன. ஆற்றில் நீராடும்போது நீரோட்ட திசையில் நின்று நீராட வேண்டும். குளத்தில் நீராடும்போது சூரியனைப் பார்த்து நின்று நீராட வேண்டும். வீட்டில் கிழக்கு திசை பார்த்து நீராட வேண்டும்.

குளிர்ந்த நீரில் குளித்தால் முதலில் தலையில் நீரை ஊற்ற வேண்டும். வெந்நீர் ஊற்றி தலை குளிக்கும்போது உள்ளங்காலில் ஆரம்பித்து பின் படிப்படியாக உச்சந்தலையில் ஊற்ற வேண்டும் என்பது பெரியோர் அறிவுரை. எனவே, நீராடும் போது இறைப் பாடல்களைப் பாடிக்கொண்டோ அல்லது இறைகோஷங்களை ஓதிக்கொண்டோ குளிப்பது நலம்.

அறிவியல் விளக்கங்கள்: அதிகாலை சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி எலும்புகளின் பலத்துக்கு மிகவும் முக்கியமானது. எனவேதான், சூரியன் உதிக்கும் கிழக்கு திசை பார்த்து நின்று குளிக்க வேண்டும். நம் உடலின் வெப்பநிலையைவிட வெந்நீரின் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் வெந்நீரை முதலில் தலையில் ஊற்றும்போது நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே தான், பாதத்தில் இருந்து படிப்படியாக ஊற்றினால் உடலின் வெப்பநிலை பாதிப்படையாது.

இறைவன் பெயரை சொல்லிக் கொண்டே குளிப்பதால் சைனஸ் பிரச்சனை வராது. நம் முகத்தில், குறிப்பாக தாடையில் உள்ள வேக்ஸ் நரம்புகள் கோஷம் கூறும்போது இயங்குவதால் நீர்கோர்வை தடுக்கப்படுகிறது. விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு  தூய்மை மிக அவசியம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், மந்திர ஒலிகளின் அதிர்வுகள் நம் உடலில் நுழையத் தடை ஏற்படுகிறது. அதனால்தான் விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது. என்பதை மரபாக வைத்துள்ளனர் நம் பெரியவர்கள். தவிர, விரத நாட்களில் பகலில் தூங்கக்கூடாது. எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பகலில் தூக்கம் வரும். எனவே, வெறும் தலைக்குக் குளிக்கலாம் என்றும் கூறினர். குளித்தவுடன் நமது அடுத்த செயல்,  இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருந்தாலும், ஆலயத்தில் தொழுவதுதானே சாலவும் சிறந்தது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar