Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் கிரிவலம் தடை ... நயினார்கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றம் நயினார்கோவிலில் பூக்குழி திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோவிலில் ரூ.1 கோடி நகை மறைப்பு?
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோவிலில் ரூ.1 கோடி நகை மறைப்பு?

பதிவு செய்த நாள்

16 மார்
2022
10:03

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், நன்கொடையாக வழங்கிய 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மறைக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு, மார்ச் 1ல், புதுச்சேரி தனியார் நிறுவனம் சார்பில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்கமணிகள் பதித்த பெரிய ருத்ராட்ச மாலை, அம்மனுக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ் வழங்கப்பட்டன. கோவில் நிர்வாகம் இந்த நகைகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியிடவில்லை. நகைகளை இதுவரை பதிவு செய்து, மதிப்பீடு செய்யாமல் பணியாளர்களே வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. நகை மதிப்பீட்டிற்கு சிவகங்கையில் இருந்து அறநிலையத்துறை மதிப்பீட்டாளர் வர வேண்டும் எனவும், வைர நகைகள் மதிப்பு குறித்த பில் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு வழங்கப்பட்ட நகையை மறைக்க முயற்சி நடக்கிறதா என, பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து, ராமநாதபுரம், வழுதுார் பா.ஜ., வழக்கறிஞர் கணேஷ், கலெக்டர் சங்கர்லால் குமாவத்திடம் மனு அளித்தார்.

கோவில் மேலாளர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், நகைகள் தொடர்பாக முறைகேடு நடக்க வில்லை. நகைகள் 36 லட்சம் ரூபாய் என நன்கொடையாளர்கள் ரசீது தந்துள்ளனர். விடுமுறை நாட்கள் வந்ததால் நகைகளை கணக்கில் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. வைர நெக்லஸ் பில் இல்லாததால் அதை கேட்டுள்ளோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar