Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொட்டிச்சி அம்மன் கோவிலில் மண்டல ... ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நான்காம் ஆண்டு ஆராதனை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சிவலோகநாத சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
சீர்காழி சிவலோகநாத சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு

பதிவு செய்த நாள்

16 மார்
2022
10:03

மயிலாடுதுறை : சீர்காழி அருகே நந்தனாருக்காக நந்தி விலகி நிற்கும் திருப்புன்கூர்  அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநாத சுவாமி கோவிலில் செவ்வாய் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு  சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருப்புன்கூர் கிராமத்தில் அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் உடனுறை சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் புற்று ரூபமாக மூலவராக விற்றிருக்கிறார். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த நந்தனார் சிதம்பரம் நடராஜ பெருமானை தரிசிக்க செல்லும் போது திருப்புன்கூர் தளத்திற்கு வந்தடைந்தார். அப்பொழுது அவர் சிவபெருமானை தரிசிக்க சென்ற போது சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோவிலின் வாசலிலேயே நின்று சிவபெருமானை தரிசிக்க முயன்றார் ஆனால் கருவறை முன்பு இருந்த நந்தி பகவானை தாண்டி சிவபெருமானை அவரால் பார்க்க முடியவில்லை. தன்னால் இறைவனை காண முடியவில்லையே என மனதார சிவபெருமானை வேண்டி நந்தனார் காத்திருந்தபோது தனது பக்தனின் வேதனையை அறிந்த சிவபெருமான் நந்தி பகவானை சற்று விலகி இருக்குமாறு பணித்தார். அதன்படி நந்தி பகவான் கருவறை முன்பு நேராக இல்லாமல் இடதுபுறமாக சற்று விலகி இருந்தார். அப்போது வாசலில் இருந்தே இறைவனை நந்தனார் மனமுருகி வேண்டி வேண்டியதாக கோவில் வரலாறு தெரிவிக்கின்றது.இன்றளவும் கோவிலின் ராஜ கோபுரத்திற்கு  வெளியே நின்றே மூலவரை தரிசிக்கலாம் நந்தி பகவான் விலகியே இருப்பார். இவ்வளவு சிறப்புமிக்க இக்கோவிலில் இன்று செவ்வாய் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு  பால், தயிர். சந்தனம். திரவிய பொடி. மஞ்சள் பொடி, விபூதி. தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களை சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய வஸ்திங்கள் சாற்றப்பட்டு அருகம்புல். வில்வ இலை, பல்வேறு மலர்களால் ஆன மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானையும் சிவலோகநாத சுவாமியையும் வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar