Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. ... கும்பம் : ராகு, கேது பெயர்ச்சி பலன் கும்பம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (21.3.2022 முதல் 8.10.2023 வரை)
மகரம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. உழைப்பால் உயர்வீர்கள்
எழுத்தின் அளவு:
மகரம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. உழைப்பால் உயர்வீர்கள்

பதிவு செய்த நாள்

17 மார்
2022
14:24

உத்திராடம் 2, 3, 4ம் பாதம்: எதிரியால் தொல்லை

ராகு இதுவரை 5ம் இடமான ரிஷபத்தில் இருந்து குடும்பத்தில் பிரச்னையை தந்து கொண்டிருந்தார். இப்போது அவர் 4ம் இடமான மேஷத்திற்கு வருவதால் பிரச்னை மறையும். அதே நேரம் இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல அலைச்சல், சிற்சில பிரச்னையை உருவாக்கலாம்.
 கேது இதுவரை உங்கள் ராசிக்கு 11ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக நல்ல சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தந்திருப்பார்.அவர் இப்போது 10ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார்.  இங்கு அவர் உடல் உபாதைகளை தரலாம். எதிரி தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. ஆனால் கேது பிற்பகுதியில் காரிய அனுகூலத்தைப் கொடுப்பார். ராகுவின் பின்னோக்கிய 11ம் இடத்துப்பார்வை ராசிக்கு 6ம் இடமான மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சம். இதன் மூலம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். ஆற்றல் மேம்படும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். இனி விரிவான நட்சத்திர பலனைக் காணலாம்

பொதுபலன்:  முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகமான நிலையில் இல்லை. ராகு குடும்பத்தில் பகையை ஏற்படுத்துவார். குழப்பம் நிலவும். மனக்கவலை ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்க அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.
குருவின் பார்வைகள் சிறப்பாக அமைந்து உள்ளதால் பிரச்னைகளை முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை அவர் நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தொழில்: வியாபாரத்தில் லாபம் பெற அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம். புதிய தொழில் தொடங்க அதிகமான முதலீடு செய்ய வேண்டாம். பணமுதலீட்டை விட அறிவைப் பயன்படுத்தி லாபம் காணுங்கள்.  பொருள் விரயம், பணமாயம் போன்றவை நிகழலாம். குடும்ப பிரச்னையை மறந்து தொழில் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.
பணியாளர்கள்:
வேலைப்பளு அதிகரிக்கும். பணியிடத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம், பணிமாற்றம் ஏற்படலாம்.  அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.
 
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குருவின் பார்வையால் பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும்.
அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பலனை பெற முடியாது. ஆனால் மக்கள் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். தொண்டர்களுக்காக பணம் செலவழிப்பர்.

 மாணவர்கள்: மனதில் தளர்ச்சி ஏற்படும். இருப்பினும் குருவின் பார்வையால் நன்மை கிடைக்கும். தேர்வில் நல்லமதிப்பெண் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
விவசாயிகள்: ஓரளவு மகசூல் கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள்: குடும்பத்தில் உங்களின் பங்களிப்பு கூடுதலாக தேவைப்படும். வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையெனில் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உறவினர்கள் வகையில் விரோதம் வரலாம். எனவே ஒதுங்கி இருக்கவும். குருவின் பார்வையால்  குரு சுபநிகழ்ச்சி நடந்தேறும். வேலைக்கு செல்லும் பெண்கள் நற்பலன் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும்.
உடல் நலம்: உடல்நிலை சுமாராக இருக்கும். கேதுவால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
பரிகாரம்: சனிக்கிழமை அனுமனை வணங்குங்கள். ராகு காலத்தில் சரபேஸ்வரர்,  துர்கையை வழிபடுங்கள். விதவை மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பத்திரகாளி அம்மன் வழிபாடு அவசியம்.
                      
 திருவோணம்: பயணத்தில் கவனம்

ராகு இதுவரை 5ம் இடமான ரிஷபத்தில் இருந்து குடும்பத்தில் பிரச்னையை தந்து கொண்டிருந்தார். இப்போது அவர் 4ம் இடமான மேஷத்திற்கு வருவதால் பிரச்னை மறையும். அதே நேரம் இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல அலைச்சல், சிற்சில பிரச்னையை உருவாக்கலாம்.
 கேது இதுவரை உங்கள் ராசிக்கு 11ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக நல்ல சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தந்திருப்பார்.அவர் இப்போது 10ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார்.  இங்கு அவர் உடல் உபாதைகளை தரலாம். எதிரி தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. ஆனால் கேது பிற்பகுதியில் காரிய அனுகூலத்தைப் கொடுப்பார். ராகுவின் பின்னோக்கிய 11ம் இடத்துப்பார்வை ராசிக்கு 6ம் இடமான மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சம். இதன் மூலம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். ஆற்றல் மேம்படும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். இனி விரிவான நட்சத்திர பலனைக் காணலாம்.

பொதுபலன்:  
ராகு, கேது சாதகமற்ற பலனை தந்தாலும் குருவின் பார்வையால் நற்பலன்கள் கிடைக்கும் குடும்பத்தில் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்க அதிக முயற்சி தேவைப்படும். குருபார்வையால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
ராகு சாதமகற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பின்னோக்கிய 11ம் இடத்துப் பார்வையால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால்  தடைகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்படும். உங்களைக் கண்டு பகைவரும் அஞ்சும் நிலை உருவாகும்.
தொழில்:
எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலை துாக்கலாம். எப்போதும் அவர்கள் வகையில் ஒருகண் இருப்பது நல்லது. ஆனாலும் உங்கள் புத்தியால் அதை முறியடித்து வெற்றி காணலாம். குடும்ப பிரச்சினையை தொழிலில் காட்டாமல் இருந்தால் நல்ல முன்னேறம் அடையலாம். குரு பார்வையால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும்.

பணியாளர்கள்: வேலையில் கவனமாக இருக்கவும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடையில்லை. குருபார்வையால். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும்.

கலைஞர்கள்: சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். போட்டியாளர்கள் வகையில் இடையூறுகள் வரலாம்.

அரசியல்வாதிகள்: பலனை எதிர்பராமல் உழைக்க வேண்டியதிருக்கும். சில நேரங்களில் மனக்குழப்பம் ஏற்படலாம். எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் நடப்பது நல்லது. முக்கிய முடிவு எடுப்பதை தள்ளிப் போடுங்கள்.

மாணவர்கள்: குருவின் பார்வையால் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள்.

விவசாயிகள்: பணப்பயிர்களை தவிர்க்கவும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் போகாது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள்:  அக்கம் பக்கத்தினரால் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு.  குடும்ப பிரச்னை, உறவினர் கருத்து வேறுபாடு, பொருள் இழப்பு முதலியன குருவின் பார்வையால் மறையும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கை நிறைவேறும்.
உடல்நலம்: உடல்நிலை சுமாராக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
பரிகாரம்: சனிபகவானுக்கு  நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.  பைரவர் வழிபாடு நன்மை தரும். சனிக்கிழமையில் பெருமாளையும், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியையும் வழிபடுங்கள். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் முருகனை வழிபடுங்கள்.

அவிட்டம் 1, 2ம் பாதம்: உழைப்பால் உயர்வீர்கள்

ராகு இதுவரை 5ம் இடமான ரிஷபத்தில் இருந்து குடும்பத்தில் பிரச்னையை தந்து கொண்டிருந்தார். இப்போது அவர் 4ம் இடமான மேஷத்திற்கு வருவதால் பிரச்னை மறையும். அதே நேரம் இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல அலைச்சல், சிற்சில பிரச்னையை உருவாக்கலாம். உழைப்புக்கேற்ப வாழ்வில் உயர்வீர்கள்.  
 கேது இதுவரை உங்கள் ராசிக்கு 11ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக நல்ல சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தந்திருப்பார். அவர் இப்போது 10ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார்.  இங்கு அவர் உடல் உபாதைகளை தரலாம். எதிரியால் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. ஆனால் கேது பிற்பகுதியில் காரிய அனுகூலத்தைப் கொடுப்பார். ராகுவின் பின்னோக்கிய 11ம் இடத்துப்பார்வை ராசிக்கு 6ம் இடமான மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சம். இதன் மூலம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். ஆற்றல் மேம்படும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். இனி விரிவான நட்சத்திர பலனைக் காணலாம்.
பொதுபலன்:  
மனதில் குழப்பம் நிலவும். முக்கிய விஷயங்களில் குடும்ப பெரியோர்களின் ஆலோசனை கேட்டு பின்பற்றுவது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். வீடு, மனை வாங்கும் எண்ணம் தடைபடலாம். வீண் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் தங்க நேரிடலாம். வீண் விவாதங்களை தவிர்க்கவும். குருவின் பார்வையால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும். பொன் பொருள் சேரும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். 2023 ஏப். 22க்கு பிறகு உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம்.
தொழில்:
அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பகைவரின் இடையூறு அவ்வப்போது தலைதுாக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். புதிய வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது. அப்படியே தொழில் தொடங்க நினைப்பவர்கள் குறைந்த முதலீட்டில் ஆரம்பிப்பது நல்லது. தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். வாடிக்கையாளரை அதிக முயற்சி எடுத்து தக்க வைக்க வேண்டியதிருக்கும்.
பணியாளர்கள்: மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பணி, இடமாற்றம் ஏற்படலாம். இனம் தெரியாதவர்கள் வகையில் நட்பு பாராட்ட வேண்டாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. குருவின் பார்வையால் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். விருது, பாராட்டு பெறுவதில் தாமதம் உண்டாகும்.
அரசியல்வாதிகள்: பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.  சிலர் தாங்கள் வகித்த பொறுப்பையோ விட வேண்டிய நிலை ஏற்படும்.
மாணவர்கள்: முயற்சிக்கேற்ப வளர்ச்சி இருக்கும்.  இருப்பினும் குருவின் பார்வையால் பிற்போக்கான நிலை இருக்காது. ஆசிரியர். பெரியோர்களின் ஆலோசனையை ஏற்று நடந்தால் முன்னேற்றம்  உண்டு.   
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறை இருக்காது. மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூலைப் பெறலாம். கோழி, ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது.

பெண்கள்: ஆடம்பர செலவை தவிர்க்கவும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இருப்பினும் குருவின் பார்வையால் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. அக்கம் பக்கத்தினரின் தொல்லை மறையும். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.
உடல்நலம்: உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம். சிலர் வீண் மனஉளைச்சலில் இருப்பர். பயணத்தின் போது கவனம் தேவை.
பரிகாரம்: ராகு காலத்தில் பைரவரை வழிபடுங்கள். நாக தேவதையை வணங்குங்கள். குருபகவானுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (21.3.2022 முதல் 8.10.2023 வரை) »
temple news
அசுவினி:  சிந்தித்து செயல்படுங்கள்இதுவரை ராகு உங்கள் ராசிக்கு 2ம் இடமான ரிஷபத்தில் இருந்து ... மேலும்
 
temple news
கார்த்திகை 2-ம் பாதம்: பொருளாதார வளர்ச்சிகடந்த சில ஆண்டுகளாக ராகு, கேதுவால் எந்தவித நற்பலனும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4-ம் பாதம்: உற்சாகம் அதிகரிக்கும் உங்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4-ம் பாதம்: பெண்களால் பிரச்னைஇந்த ராகு, கேது பெயர்ச்சி சுமாரான பலனைத் தரும். இதுவரை 11ம் இடமான ... மேலும்
 
temple news
மகம்: பிரச்னைகள் விலகும்இந்த ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். இதுவரை இந்த கிரகங்கள் திருப்தியற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar