ஆறுபடை வீடுகளில் அருளும் முருகப்பெருமானை, சென்னை பெசன்ட் நகரில் ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்தக் கோயிலில் அறுங்கோண சக்கர அமைப்பில், ஆறு சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. நடுவில் கணபதி இருக்கிறார். ஒரே கல்லில் 12 அடி உயரத்தில் முருகனின் வேலாயுதம் உள்ளது. ஆறுபடைகளில் முருகன் எப்படி காட்சியளிக்கிறாரோ, அதே கோலத்தில் இங்கும் அருளுகிறார். இக்கோயிலில் இருந்து சற்று துாரத்தில் தான் அஷ்டலட்சுமி கோயில் உள்ளது.