கோயிலிலுள்ள ஆஸ்தான மண்டபத்தில் தெய்வானை திருமண கோலம் கொண்ட சிற்பம் உள்ளது. முருகன், தெய்வானை, இந்திரன், முருகன் ஆகியோர் முத்து மாலைகள், பதக்கங்கள் அணிந்துள்ளனர். இந்த சிற்பத்துக்கு எதிரே தெய்வானையின் திருமணக் கோலத்தை ராணி மங்கம்மாள், அவரது பேரன் விஜயரங்க சொக்கநாதருடன் கைகளைக் கூப்பி தரிசிக்கும் வகையிலான சிற்பம் இருக்கிறது. ஆனால் ராணியின் கழுத்தில் முத்து மாலை இல்லை. முன் கைகளில் வளையல்களும், விரல்களில் மோதிரங்களும், தலையில் கொண்டையுடன் காட்சி தருகிறார். அருகில் ராணியின் பேரரான விஜயரங்க சொக்கநாதர் கைகூப்பி நிற்கிறார்.