Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேட்டராய சுவாமி சொர்க்கவாசல் ... மாரியம்மன் கோயில் பங்குனி பால்குடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து கோவில் கட்டுவதற்கு நிலம் வழங்கிய முஸ்லிம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2022
06:03

பாட்னா: பீஹாரில் கட்டப்பட உள்ள உலகின் மிகப்பெரிய ஹிந்து கோவிலுக்கு, 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முஸ்லிம் குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கிழக்கு சம்பரான் மாவட்டம் கைத்வாலியா பகுதியில், உலகின் மிகப்பெரிய ஹிந்து கோவிலாக விராட் ராமாயண் மந்திர் கட்டப்பட உள்ளது.

பாட்னாவை சேர்ந்த மஹாவீர் மந்திர் அறக்கட்டளை இப்பணிகளை மேற்கொள்கிறது. உயரமான கோபுரங்களுடன் 18 கோவில்களும், சிவன் கோவிலில் உலகின் மிகப்பெரிய லிங்கமும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அறக்கட்டளை சார்பில், 125 ஏக்கர் நிலம் பெறப்பட்டு உள்ளது. அசாமின் கவுஹாத்தியில் தொழில் அதிபராக இருக்கும் கிழக்கு சம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்த இஷ்தியாக் அகமது கான் என்பவரும், 2.5 கோடி ரூபாய் நிலத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார். இதுகுறித்து, அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் கூறியதாவது:இஷ்தியாக் மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கியுள்ள நன்கொடை, இரு சமூகத்தினர் இடையிலான சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. அவர்கள் உதவி இல்லாவிடில், இந்த கனவுத் திட்டம் நிறைவேறுவது கடினமாக இருந்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார். கிழக்காசிய நாடான கம்போடியாவின் அங்கோர் வாட் ஆலயம், உலகின் மிகப்பெரியது என பெயர் பெற்றுள்ளது. விராட் ராமாயண் மந்திர் அதைவிட உயரமாக, 500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளதாக தெரிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி கோவை ஆர் எஸ் புரம் காமாட்சி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வேட்டைக்காரன் சுவாமி திருவிழாவில்,50 கிடாய்கள் வெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar