Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலடியில் மகாலட்சுமிக்கு தங்க ... ஆண்டிபட்டி காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஆண்டிபட்டி காளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சர் ஆய்வு
எழுத்தின் அளவு:
குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சர் ஆய்வு

பதிவு செய்த நாள்

25 மார்
2022
01:03

காஞ்சிபுரம் : குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஏப்ரல் மாதம் 25ம் தேதி நடைபெறும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கேசேகர்பாபு       பேட்டி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் திருநாகேஸ்வர சுவாமி  திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்றுவரும் கும்பாபிஷேகப் பணிகளை பார்வையிட்டனர். மேலும் இக்கோயிலில் நடைபெற்றுவரும் திருமண மண்டப பணிகளையும், ஸ்ரீபெரும்புதூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள கடைகள் கட்டும் பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம்கூறியதாவது.  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள கழக அரசில், இந்து சமய அறநிலைத்துறை மிகவும் சிறப்பான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் பாராட்டும் வண்ணம், திருக்கோயில்களின் வளர்ச்சிக்காகவும், பக்தர்களின் வசதிகளுக்காகவும் பல்வேறு பணிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம், புதிதாக திமுக அரசு பொறுப்பேற்றதும் தமிழக முதல்வர் அவர்கள் வழிகாட்டுதல்படி நானும் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களும் கடந்த ஒன்பது மாதங்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு திருக்கோவில்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதனடிப்படையில் தற்பொழுது குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூபாய் 2 கோடி செலவில் விரைவாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குறுகிய மலைப் பாதை அகலப்படுத்தவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் பணிகள் நடைபெற்று வருகின்றன, அது மட்டுமல்லாமல் ரூபாய் 3.20 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட உள்ள திருமண மண்டப பணிகள் குறித்தும் தற்போது ஆய்வு மேற்கொண்டோம். மேலும் தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படி இங்கு நடைபெற்றுவரும் கும்பாபிஷேக பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகிற 25.4. 2022 அன்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வருகிற மே மாதம் சேக்கிழாருக்கு குருபூஜை அரசு விழாவாக நடைபெற உள்ளதால் இங்குள்ள சேக்கிழார் மணிமண்டபத்தை புனரமைக்கவும் ஆய்வு மேற்கொண்டோம். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள திருநாகேஸ்வர சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் ரூபாய் 1.20 கோடி செலவில் நடைபெற உள்ளது.  இக்கோயில் உள்ள நுழைவாயில் கதவு பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு உள்ளது என்பதால் அதனை மாற்றி தேக்கு மரத்திலான கதவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன,  இந்த திருக்கோயிலுக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், திருக்கோயிலுக்கு வருமானத்தை பெருக்கவும் புதிய கடைகள் அமைக்கவும் தற்போது ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன .

தமிழக முதல்வர் அவர்கள் இந்து சமய அறநிலைத்துறைக்கு ஏற்கனவே குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள கோயில்கள், மற்றும் குடமுழுக்கு துவக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற உள்ள கோயில்கள் ஆகியவற்றில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக 100 கோடியை ஒதுக்கி உள்ளார். தமிழக முதல்வர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 9 மாதங்களில் 94 திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் 80 தனியார் திருக்கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது, 1500 திருக்கோயில்களில் திருப்பணிகள் துவக்கி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளன அவற்றில் 560 திருக்கோயில்களுக்கு திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் துவக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது . இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில்களில் குடியிருந்து வரும் வாடகைதாரர்களிடமிருந்து ரூபாய் 500 கோடி வாடகை வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 142 கோடி ரூபாய் வரை வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது. முறையாக தொடர்ந்து வாடகை செலுத்தாதவர்கள் மீது உரிய முறையில் சட்டப்படி வாடகை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இங்கு உண்மை நிலையை கண்டறிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப, காஞ்புரம் மாவட்டஆட்சி தலைவர் டாக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை,  இந்து சமய அறநிலையத்துறை உயர்மட்ட குழு உறுப்பினர் திருமதி.தேச மங்கையர்க்கரசி, இணை ஆணையர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், 500 நடன கலைஞர்கள் பரத நாட்டியம், கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., துாரம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை, இளையான்குடி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லி மர பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar