வீட்டில் சிறிய லிங்கம் இருந்தாலும் குடும்பத்தினர் அனைவரும் காலையிலேயே குளித்து விட வேண்டும். மாலையில் விளக்கேற்றி ‘சிவாயநம’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். தினமும் கற்பூரம் அல்லது நெய் தீப ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை அறையை தினமும் நீரால் கழுவ வேண்டும். தெய்வ வழிபாட்டின் நோக்கமே சுத்தம் பேணுவது தான். சுத்தமான இடத்தில் ஆழ்ந்த பக்தியுடன் பூஜை செய்தால் சிவனருள் பூரணமாக கிடைக்கும்.