* காலம் ஒருநாள் மாறும். உன் கவலைகள் யாவும் தீரும் * தர்மத்தால் பெறும் வெற்றியே என்றும் நிலைத்து நிற்கும். * மனதில் கருணை இருந்தால் மட்டுமே கடவுளின் அன்பை பெறலாம். * உயிர்கள் மீது இரக்கம் காட்டுவதே தர்மங்களில் மேலானது. * மலர்ந்த முகமும், இனிய சொல்லும் தான் இன்பமாக இருப்பதற்கு வழி. * பள்ளி, தொழிற்சாலை அதிகமானால் சிறைச்சாலை குறைந்து விடும். * ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய். இதுவே தானத்தில் சிறந்தது. * உனக்கு உதவி செய்ய எவ்வளவு பேர் இருந்தாலும் சுயபுத்தியை வளர்த்துக்கொள். * சென்றதை நினைத்து வருந்தாதே. இனி நடக்கப்போவதில் கவனம் செலுத்து. * ஆணும் பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை. * அறிவு தேடலை நிறுத்தாதே. தொடர்ந்து பணி செய். * சொல்வது யாருக்கும் எளிது. ஆனால் அதன்படி நடப்பது கடினம். * உலகில் தர்மம் இருக்கும் வரையில் அதர்மமும் இருந்தே தீரும். * ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் உன் கையில்தான் உள்ளது. * தவறு செய்துவிட்டேனே என வருந்தாதே. இனியும் அதை செய்யாமல் இரு. * பல கஷ்டங்களை சந்திக்கும்போதுதான் உனக்கு பல உண்மைகள் புரியவருகின்றன.