* மக்களுக்கு உண்மையாக சேவை செய்பவரே தலைவன். * பொருளின் மீது அதிகமாக ஆசைப்படாதீர்கள். * எல்லோருக்கும் ஒவ்வொரு பொறுப்பு தரப்பட்டுள்ளது. அதை சரியாக செய்யுங்கள். * தீய குணம் கொண்டவர்களுடன் பழகுவதைவிட தனியாக இருங்கள். * உங்களின் செயல்முறைக்கேற்ப இறப்புக்கு பிந்தைய வாழ்வு அமையும். * குறைந்த வருமானத்தில் நிறைவான வாழ்க்கை வாழ்பவர்கள் சிறப்பானவர்கள். * நீ செய்த பாவங்களை நினைத்து கண்ணீர் சிந்து. நல்லதை செய். * குற்றமற்ற பணியாளரின் மீது வீண்பழி சுமத்துபவன், மறுமை நாளில் சவுக்கால் அடிக்கப்படுவான். * முதலில் வலது காலில் செருப்பை அணியுங்கள். * குடும்பத்தினரை அலட்சியம் செய்தால் சுகமான வாழ்வை இழக்க நேரிடும். * கொடையாளியின் உணவு மருந்தாகும். கஞ்சனின் உணவு நோயாகும். * சொர்க்கத்திலிருந்து மண்ணுலகிற்கு வந்தது அத்திப்பழம். இது மூல வியாதியை குணமாக்கும். – பொன்மொழிகள்