Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மையான தலைவன் மனக்கஷ்டம் போக்கும் திருத்தலம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிரிந்தவரை இணைக்கும் எல்லம்மா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2022
02:03


திருமணம் என்பது  ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை ஒப்பந்தம். இதில் விரிசல் ஏற்பட்டு துன்புறுவோருக்கு வாழ்வு தர காத்திருக்கிறாள் சவுண்டாட்டி எல்லம்மா என்னும் ரேணுகா தேவி. கர்நாடகாவின் பெல்காமுக்கு அருகிலுள்ள இக்கோயிலை ஒரு முறை தரிசித்தாலும் பிரிந்தவர் ஒன்று சேர்வர்.       
 ஜமதக்னி என்னும் முனிவரின் மனைவி ரேணுகாதேவி. அவள் ஒரு நாள் தண்ணீர் கொண்டு வர குளத்திற்கு சென்றாள்.  களிமண்ணால் பானை செய்து உடனடியாக அதில் தண்ணீர் எடுத்து வருவது அவளது வழக்கம். அன்று வானில் பறந்து சென்ற கந்தர்வன் ஒருவனது நிழலை குளத்து நீருக்குள் கண்டாள். ஒருகணம் அவனது அழகில் மயங்கினாள். அதன்பின் பச்சை மண்ணில் பானை செய்யும் சக்தியை அவளுக்கு இல்லாமல் போனது. கணவரான ஜமதக்னி முனிவர் ஞான திருஷ்டியால் குளத்தில் நடந்ததை உணர்ந்தார். கோபத்துடன் மனைவியின் தலையை கோடரியால் வெட்டும்படி மகனான பரசுராமனுக்கு உத்தரவிட்டார். அவனும் தந்தையின் கட்டளையை ஏற்று தாயின் தலையை துண்டித்தான். அதற்கு ஈடாக வரம் அளிப்பதாக ஜமதக்னி வாக்கு கொடுத்தார். வரத்தின் பலத்தால் பரசுராமன் மீண்டும் தாயை உயிர் பெறச் செய்தான். இந்த ரேணுகாதேவியே இங்கு மூலவராக இருக்கிறாள்.
பொம்மப்ப நாயக்கர் என்னும் மன்னர் 1514ல் இங்குள்ள சித்தார்த்த பர்வத் குன்றில் கோயிலைக் கட்டினார். சாளுக்கிய, ராஷ்டிரகூடர்களின் கட்டிட பாணியில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் அம்மனின் வெட்டப்பட்ட தலை மட்டுமே உள்ளது. அம்மனுக்கு எல்லம்மா என்றும் ஒரு பெயருண்டு. சத்தியமா என்னும் அம்மனுக்கும் சிறிய கோயில் இங்குள்ளது. அதனை தரிசித்த பிறகே பக்தர்கள் ரேணுகாதேவியை தசிரிக்கின்றனர். விநாயகர், மல்லிகார்ஜூனர், சித்தேஸ்வரர், பரசுராமர், ஏகநாதர் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தபின் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புடவை சாத்துகின்றனர்.
எப்படி செல்வது
* பெங்களூரிலிருந்து பெல்காம் செல்லும் வழியில் தார்வார் என்னும் இடத்திலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் சென்று சவுண்டாட்டியை அடையலாம். அங்கிருந்து 5 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar