மனிதர்களுக்கு பூமியில் பல வீடுகள் இருக்கலாம். அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கில் வருமானமும் கிடைக்கலாம். உண்மையில் இதனால் நாம் அனுபவிப்பதாக நினைக்கும் இன்பத்தில், துளியும் இன்பம் கிடையாது. உண்மையான இன்பம், விண்ணக வீட்டில் தான் இருக்கிறது. நாம் குடியிருக்கப் போகும் விண்ணக வீடு இதோ... விரைவில் நமக்கு கிடைக்கப் போகிறது. இயேசு சொன்னார், “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்,” என்று! ஆம்.. அது முற்றிலும் உண்மை. அவர் முன்னதாகவே பரிசுத்தமான பிதாவிடம் சென்று நமக்காக ஒரு உலகைப் படைத்திருக்கிறார். நமக்கு ஒரு விண்ணக வீட்டைத் தர காத்திருக்கிறார். இந்த வீட்டிற்கு சென்ற பிறகு நாம் கஷ்டத்தை அனுபவிக்கக் கூடாது என்றால் கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இயேசு நடந்த அன்புப்பாதையை தேர்ந்தெடுத்து, அதிலிருந்து சிறிதும் பிறழாமல் நடக்க வேண்டும். ஒழுக்கத்தையும், உண்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். பிறருக்கு துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும்.