திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் சுமார் 12 கி.மீ. தொலைவு பயணித்தால் விராலிப்பட்டி பிரிவு வரும். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், சிறுமலை சாரலில் அமைந்திருக்கிறது தவசிமடை மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில். பரத்வாஜர் சித்தர் வழிபட்ட இந்த கோயிலில் அருள்கிறார். ஆதி பைரவர் இங்கே சிவனாருக்கு எதிரிலிலேயே காட்சி தருகிறார். இவர் இவருக்கு மாதம் தோறும் மக நட்சத்திரத்திலும் பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் ஆகிய நாட்களிலும் சிறப்பு அபிஷேகம் - பூஜை நடைபெறும் தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு செவ்வரளி சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம்! இந்த கோயிலில் மகா சிவராத்திரி அன்று காலையில் சிவனார் மீதும், மாலை நேரங்களில் இந்த பைரவரின் மீதும் சூரிய ஒளி விழும். அப்போது இந்த பைரவரைத் தரிசித்து வழிபடுவதால் பிரச்னைகள் யாவும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.