Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023.. ... தனுசு : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023.. குருவருளால் நன்மைகள் உண்டாகும் தனுசு : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023.. ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
விருச்சிகம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023.. அதிர்ஷ்ட காலம்
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023.. அதிர்ஷ்ட காலம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2022
02:04

விசாகம் 4ம்பாதம்: அதிர்ஷ்ட காலம்

நல்ல நேரம் என்பதை கிரகங்களின் சஞ்சாரமே நமக்கு உண்டாக்குகிறது. ஜென்மத்தில் சங்கடங்களை உருவாக்கி வந்த கேதுவும், 7 ல் சஞ்சரித்து  பாதிப்புகளை உண்டாக்கி வந்த ராகுவும் பெயர்ச்சியாகியுள்ள நிலையில் 4 ல் சஞ்சரித்த  குரு 2022 ஏப்.13ல் ராசிக்கு 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்க உள்ளார். தைரியத்திற்கும் வீரியத்திற்கும் காரகனான செவ்வாயை ராசி நாதனாகவும், தன, புத்திரக் காரகனான குருவை நட்சத்திர அதிபதியாகவும் கொண்ட உங்களுக்கு இது யோக காலமாக அமையும். ஏழரை சனியில் இருந்து விடுதலையான நேரத்தில் ஜென்ம கேதுவால் சங்கடம்.  3 மற்றும் 4 ல் சஞ்சரித்து வந்த குருவாலும் ஆதாயமின்மை என்ற நிலையில் ஏன் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம் என்றுகூட நினைத்திருப்பீர்கள். கடுமையான சோதனைகள் என்பது உங்களை நீங்களே புடம் போட்டுக் கொள்வதற்காகத்தான் என்பதை இப்போது உணரப் போகிறீர்கள். மூன்றாமிடத்து சனி முன்னேற்றத்திற்கு வழிகாட்ட, ஆறாமிடத்து ராகு உங்கள் ஆற்றலை வெளிப்படுத்த 5 ல் சஞ்சரிக்கும் குரு ராஜ யோகத்தை வழங்கப் போகிறார்.

நிதி: புதிய வரவுகள் உண்டாகும். தடைபட்ட வருமானம் இக்காலத்தில் வரக்கூடும் என்பதால் வீடு, மனை ஆகியவற்றில் முதலீடு செய்வீர்கள். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். தந்தை வழியில் உதவிகளும் வருவாயும் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் முதலீடு பல மடங்காக உயரும். பூர்வ சொத்துகள் மூலம் லாபம் தோன்றும். குருவருள் முழுமையாக இக்காலத்தில் உங்களுக்கிருப்பதால் செல்வ நிலையில் உயர்வினைக் காண்பீர்கள். விவசாயம், கால்நடைகள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். சேமிப்பு உயர ஆரம்பிக்கும். என்றோ எங்கோ வாங்கி வைத்த வீட்டு மனைகள் இக்காலத்தில் பல மடங்கு லாபத்துடன் விற்பனையாகும். பணம் பல வழிகளிலும் வரக்கூடிய யோக காலம் இது.

குடும்பம்: பிள்ளைகள் வழியே சங்கடங்களை அனுபவித்த உங்களுக்கு இனி அவர்கள் வழியில் நன்மைகள் உண்டாகப் போகிறது. மனம் போன வழியில் சென்றவர்கள் இனி பொறுப்புடன் செயல்பட ஆரம்பிப்பார்கள். புதிய வீடு பற்றிய உங்கள் கனவு நிறைவேறும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சகோதரர்கள் பல வகையிலும் உதவியாக இருப்பார்கள். கணவன், மனைவி உறவு பலப்படும். 12 ல் சஞ்சரிக்கும் கேது விரயத்தை ஏற்படுத்துவார் என்பதால் கையிருப்பை அசையா சொத்துகளாக மாற்றுங்கள். பிள்ளைகளின் கல்வி, திருமணங்களுக்கு திட்டமிடுங்கள். மங்கல ஓசை வீட்டில் கேட்கும் காலம் இது.

 கல்வி: மாணவர்களின் அறிவுத்திறன் அதிகரிக்கும். கல்வியின் மீதான ஆர்வம் ஏற்படும். மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். காவல்துறை, ராணுவம், கப்பல், விமானப்படை, மருத்துவ துறைகளில் ஆர்வம் கொண்டவர்கள் நீங்கள் என்பதால் அதற்குரிய கல்லுாரிகளில் இணைவீர்கள். போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றியடைவீர்கள். முயற்சிக்குரிய வெற்றியை இக்காலத்தில் அடைவீர்கள். முழு கவனத்தையும் கல்வியில் செலுத்துங்கள் உங்கள் வெற்றி உறுதியாகும்.

பெண்கள்: பிரச்னைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடையும் காலம் இது. குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். கணவன் மனைவி உறவு நலம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்ப நலனுக்காக வருவாயை செலவிடுவீர்கள். பிள்ளைகள் வழியிலும் நன்மைகளும் முன்னேற்றமும் உண்டாகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் மறையும். துணையை இழந்த பெண்களுக்கு மறுமணம் நடந்தேறும். தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துகள் கிடைக்கும். சகோதரர்கள் உதவியாக இருப்பர்.

உடல்நிலை: ஏதேனும் ஒரு பாதிப்பு. அதற்காக மருத்துவ செலவு என்ற நிலையில் மாற்றம் உண்டாகும். 6 ல் சஞ்சரிக்கும் ராகு  நோய்களை அகற்றி ஆரோக்கியத்தை உண்டாக்குவார். 3 ல் சஞ்சரிக்கும் சனி  வேகத்தையும் துணிவையும் வழங்கி உங்களை வீரநடை போட வைப்பார். 5 ல் சஞ்சரிக்கும் குரு ஆற்றலை அதிகரிப்பார் என்பதால் மருத்துவ செலவுகள் குறையும். பருவ மாற்றத்தால் உண்டாகும் நோய்கள் தொற்றும், பரம்பரை நோய்களின் பாதிப்புகளும் உண்டாகும் என்றாலும் அவை எல்லாம் சிகிச்சையால் சரியாகும்.

தொழில்: சமீப காலமாக லாபத்தையே பார்க்க முடியாமல் நஷ்டத்தையே சந்தித்த உங்களுக்கு இக்காலம் நற்காலமாக அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில்களிலும் கூட்டுத் தொழில்களிலும் இறங்கி லாபம் காண்பீர்கள். சிலர் தாங்கள் செய்துவரும் பணியை விட்டு விட்டு சுய தொழில் தொடங்கி லாபமடைவீர்கள். பில்டர்ஸ், எக்ஸ்போர்ட்டர்ஸ், கெமிக்கல், வெடிபொருட்கள் தயாரிப்போர், ஸ்டீல்ஸ் தொழில் புரிவோர் எல்லாம் முன்னேற்றம் காண்பர். இக்காலத்தில் வரவுகள் ஒன்றுக்கு பல மடங்காக வரும். அதனால் உங்கள் நிலை உயரும்.

பரிகாரம்: திருத்தணி முருகனை மனதில் நினைத்து செயல்பட உங்கள் செயல்களில் நன்மைகள் உண்டாகும்.

அனுஷம்: நினைத்தது நிறைவேறும்

ஆயுள் காரகனான சனியை நட்சத்திர அதிபதியாகவும், உடல் உறுதிக்கு காரகனான செவ்வாயை ராசி நாதனாகவும் கொண்டதால் எத்தனை சங்கடம் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பீர்கள். சமீப காலம் வரையில் சோதனைகளை சந்தித்த நிலையில் 2022 மார்ச் 21ல்  நடந்த ராகு, கேதுப் பெயர்ச்சி உங்கள் நிலையில் இருந்த சங்கடங்களை நீக்கியது என்றாலும், 4 ல் சஞ்சரித்த குருவால் உங்கள் நிலையில் சில பிரச்னைகளை எதிர்கொண்டிருப்பீர்கள். இந்த நிலையில் 2022 ஏப்.13ல் குரு உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் சஞ்சரித்து முன்னேற்றம் தரப் போகிறார். நட்பு, உறவுகளின் ஆதரவு உண்டு. உங்கள் செல்வாக்கும் உயரும். இதுவரையில் நீங்கள் அனுபவித்த சங்கடங்களுக்கெல்லாம் விடிவு காலமாக இருக்கும். பரம்பரை சொத்துகள் உங்கள் கைவசம் வரும். உங்கள் எண்ணம், செயலில் நல்லனவை வெளிபட்டு புகழுக்குரியவராக மாற்றும். நினைப்பதை சாதித்துக் கொள்வதுடன் உங்களை எதிர்த்தவர்களையும் பணிய வைப்பீர்கள். பிரபலங்களின் சந்திப்பும் அவர்கள் வழியே நன்மைகளும் உண்டாகும். இறை சிந்தனை மேலோங்கி உங்களிடம் புதுப் பொலிவையும் ஏற்படுத்தும்.

நிதி: கடன் வாங்கியதால் சிலர் அவமானம் அடைந்திருப்பீர்கள். அதிலிருந்து இனி விடுதலை அடைவீர்கள். கடன்களை அடைத்திடும் அளவிற்கு  நிதி நிலை உயரும். வம்பு வழக்கு என்று உங்கள் கைக்கு வராமல் இருந்த தொகைகள் இக்காலத்தில் உங்களை வந்தடையும். தொழில் வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். வீண் செலவுகள் கட்டுக்குள் வரும். புதிய சொத்துகள் வாங்குதல். ஆடை ஆபரணம் வாங்குதல், இருக்கும் இடத்தை உங்கள் வசதிக்கேற்ப புதுப்பித்தல் என்று செயல்படுவீர்கள். புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். சிறிய தொழிலும் வருமானம் பெருகும்.

குடும்பம்: ஏதாவது குழப்பம் என்றிருந்த நிலையில் மாறுதல் உண்டாகும். பெற்றோர் வழியில் நன்மைகளைக் காண்பீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணவன், மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் குறித்த கவலை தீரும். அவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள், வேலைஇல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். சொத்து சேர்க்கை, பொருள் சேர்க்கை என குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம், கிரகப் பிரவேசம் என்று வீட்டில் மங்கல ஓசை ஒலிக்கும். நீண்டநாள் எண்ணம் ஒவ்வொன்றாக நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

கல்வி: உடல்நிலை, மன நிலையால் தடைபட்ட கல்வியில் வளர்ச்சி சீராகும். குருவின் பார்வை கல்வியில் ஈடுபாடு கொள்ள வைக்கும். பொறியியல், கம்ப்யூட்டர், அறிவியல் மாணவர்கள் முதலிடம் பெறுவர். அரசு பொதுத்தேர்வில் உங்களால் அதிகபட்ச மதிப்பெண்களைக் காண முடியும். சட்டம், மருத்துவம், பொறியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி மாணவர்கள் வளர்ச்சி காண்பர். அரசு பணிக்கான தேர்வில் பங்கேற்க இது சரியான நேரமாகும்.  அறிவும் ஆற்றலும் முழுமையாக வெளிப்படும் காலம் இது.

பெண்கள்: சங்கடம் எல்லாம் விலகி நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும். உறவினர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பர். மறைமுகமாக தொல்லைகள் மறையும். பிள்ளைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் சொல்லுக்கு பிள்ளைகள் கட்டுப்படுவார்கள். உயர்கல்வி, திருமணம் என அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குருபார்வையால் அந்தஸ்து உயரும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு திருமணம் கூடிவரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகள் உங்களிடம் வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணி உயர்வு, சம்பள உயர்வு என்று முன்னேற்றம் தோன்றும்.

உடல்நிலை: வருமானத்தில் ஒரு பகுதி மருத்துவச் செலவுக்கு சென்றதுடன் இதுவரையில் உடலில் ஏதாவது ஒரு சங்கடத்தை அனுபவித்து வந்திருப்பீர்கள். தொற்றுநோய், மறைமுகநோய் என அவதிப்பட்டிருப்பீர்கள். இந்த நிலையை 6 ல் சஞ்சரிக்கும் ராகு அகற்றி வைப்பார். 5 ல் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு பொலிவைத் தர  3 ல் சஞ்சரிக்கும் சனி ஆரோக்கியத்தை வழங்குவார். விதிப்பயன், தசாபுத்தியில் பாதிப்பு உண்டானாலும் சூரியனைக் கண்ட பனிபோல் அவை உங்களை விட்டு விலகும். பருவகால மாறுதலால் வரும் நோய்கள் சிகிக்சைகளால் மறைந்து விடும்.  நீண்டகால நோய்களும் சிகிச்சையால் சரியாகும்.

தொழில்: தொடர்ந்து சோதனைகளை சந்தித்த உங்களுக்கு இனி நற்காலம் பிறக்கிறது.  தொழிலில் இருந்த தடைகள் விலகும். உங்களுடைய முயற்சியால் தொழில் வளர்ச்சியடைந்து லாபம் அதிகரிக்கும். விவசாயத்தில் லாபம் காண்பீர்கள். கம்பெனிகள், தொழிற்கூடம், ஸ்டீல்ஸ் வியாபாரம், கம்ப்யூட்டர் நிறுவனம். ஓட்டல்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஏற்றுமதி இறக்குமதி, கிரானைட் தொழில் செய்வோர்களுக்கு யோகமான காலமாகும். மண்ணைப் போட்டாலும் பொன்னாகும் என்ற நிலையை உணர்வீர்கள். எதிரி தொல்லை விலகும். உங்களிடம் போட்டியிட்டவர்கள் பின் வாங்குவர். அரசு, தனியார் ஊழியர்களும் அலுவலர்களும் எதிர்பார்த்திருந்த மாற்றம், உயர்வை அடைவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீலட்சுமி நாராயணரை மனதில் நிறுத்தி உங்கள் செயலில் ஈடுபடுங்கள். வெற்றி காண்பீர்கள்.

கேட்டை: நல்லகாலம் வந்தாச்சு

புத்திக்கும் வித்தைக்கும் காரகனான புதனை நட்சத்திர அதிபதியாகவும், தைரியத்திற்கும் வீரியத்திற்கும் காரகனான செவ்வாயை ராசி நாதனாகவும் கொண்டவர் நீங்கள். எந்தவொரு செயலையும் விவேகத்துடன் செய்து வெற்றி பெறக் கூடியவர்கள். உங்களுக்குள் தீர்க்க தரிசனம், ஞானம் இருக்கும் என்பதால் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தியும், உங்கள் உடன் இருப்பவர்களை பாதுகாக்கும் சக்தியும் இயற்கையாக அமையும். அத்தகைய வலிமை கொண்டிருந்தும் வாழ்வில் நெருக்கடிகளை  சமீப காலத்தில் அதிகபட்சமாக சந்தித்தவர் நீங்களாகவே இருப்பீர்கள். எங்கும் சோதனைகளாகவே இருந்த நிலையில் இக்காலத்தில் சனி 3 ல், ராகு 6 ல், 4 ல் சஞ்சரித்த குரு 2022 ஏப்.13 முதல் உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்  நன்மைகளை தன் பார்வை பலத்தால்  வழங்கிட உள்ளார்.

நிதி:  கடும் பொருளாதார நெருக்கடிகளால், கிடைத்த இடங்களில் எல்லாம் கடன் வாங்கியிருப்பீர்கள். கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என தேய்த்து தீர்த்திருப்பீர்கள் அதனால் சிக்கல்களையும் சந்தித்திருப்பீர்கள். உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லை, முதலுக்கேற்ற லாபம் இல்லை என்று மன உளைச்சலும் ஆளாகி இருப்பீர்கள். இதில் இருந்து இக்காலத்தில் மீளுவீர்கள். தடைபட்டிருந்த வருமானம் உங்கள் கைக்கு வரும்.  தொழிலில் இருந்து லாபம் வரும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கம் விலகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். புதிய சேமிப்பையும் உருவாக்குவீர்கள். வங்கியில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கப்பெற்று புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

குடும்பம்: தொழில், பணி காரணமாக உங்களுக்கும் குடும்பத்திற்குமிடையே இடைவெளி உண்டாகி இருக்கும். கடுமையான நெருக்கடிகளின் காரணமாக எதிலும் பிடிப்பற்ற நிலை உங்களுக்கு உருவாகி இருக்கும். இந்த நிலையில் 5 ல் சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி, முன்னேற்றம் என்ற நிலை உருவாகும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். ஊர்விட்டு ஊர் சென்றுவந்த நிலை மாறி இருப்பிடம் நிரந்தரமாகும். சொத்துகள் வாங்கும் முயற்சி பலிதமாகும். கணவன், மனைவி உறவு மகிழ்ச்சியாகும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் குறை தீரும். பிள்ளைகள் வழியே மகிழ்ச்சி ஏற்படும். எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படுவீர்கள்.

கல்வி: ஆசிரியர்கள் வழிகாட்டுதலால் ஊக்கமடைவீர்கள். இடையில் ஏற்பட்ட தடைகள் அகலும். உங்களின் அறிவும் ஆற்றலும் வெளிப்படும். வித்யா காரகனின் சாரம் பெற்றவர் நீங்கள் என்பதால் கல்வியின் நுணுக்கங்களை நீங்கள் நன்கு அறிந்தவர்களாக இருப்பீர்கள். அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொறியியல், கல்வியியல், அலுவலக மேலாண்மை, முனைவர் பட்ட மாணவர்கள் எல்லாம் இக்காலத்தில் முன்னேற்றமடைவீர்கள். அரசு பணிக்குரிய போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும். தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தினால் மதிப்பெண்கள் அதிகரிக்கும்.  விரும்பிய மேற்படிப்பில் எளிதாக இடம் கிடைக்கும்.

பெண்கள்:  உங்களுக்கு இனி யோககாலம் என்றே சொல்ல வேண்டும். குருவின் பார்வையால் செல்வாக்கு உயரும். நெருக்கடிகளில் சிக்கித் தவித்த உங்கள் குடும்ப நிலையில் மாற்றம் உண்டாகும். எதிரி தொல்லைகள் விலகும். தந்தை வழியினரின் உதவி முழுமையாக உண்டாகும்.  இக்காலத்தில் பொன்னும் பொருளும் சேரும். நல்ல நேரம் வரும்போது  எப்படி வரும்? எங்கிருந்து வரும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் இடமில்லாமல் போகும் என்பதை இக்காலத்தில் நீங்கள் உணரப் போகிறீர்கள். திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு திருமணம் என்று உங்கள் செயல்பாடுகள் தொடரும். அந்நிய  மனிதர்களின் அறிமுகமும் நட்பும் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வழியமைக்கும். திருமண வயதினருக்கு வரன் கூடிவரும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

உடல்நிலை: உங்கள் ஆரோக்கியத்தில் எல்லாவிதமான சங்கடங்களையும் அடைந்திருப்பீர்கள். தொடர்ந்து மருத்துவ செலவுகளும் உண்டாகி இருக்கும். இந்நிலையில் 2022 மார்ச் 21 முதல் ரோக ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ராகு உங்கள் நோய்களில் இருந்த வீரியத்தைக் குறைத்திருப்பார். ஆயுள்காரகன் சனி பகவான் 3ம் இடத்தில் சஞ்சரிப்பதால்  சிகிச்சைகளின் வழியே உடல் நிலையில் இருந்த பாதிப்பை விலக்கியிருப்பார். 5ம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு பொலிவையும் வலிவையும் உண்டாக்கி புதிய மனிதராக உங்களை மாற்றுவார்.  என்பதால் இனி நோய்கள் குறித்த அச்சமும், உயிர்மீது எந்தவிதமான பயமும் இனி உங்களுக்கு வேண்டாம். ஒட்டுமொத்த உலகிற்கே உண்டாகும் பாதிப்பு, நோய்த்தொற்று உங்களுக்கு உண்டானாலும் சிகிச்சைகளால் அவற்றில் இருந்து விடுபட்டு விடுவீர்கள் என்பதால் உங்கள் உடல்நிலைப் பற்றிய கவலைகள் இக்காலத்தில் உங்களுக்கு வேண்டாம்.

தொழில்: மார்க்கெட்டிங், சேல்ஸ் என்று அலைந்து திரிந்து வந்தவர்களின் நிலையில் மாற்றம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகி லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொழில்களின் வழியே ஆதாயம் உண்டாகும். எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர், எலெக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், பிளம்பிங்  தொழில்களில் ஈடுபட்டிருப்போர் முன்னேற்றம் காண்பர். மருத்துவம், கெமிக்கல், பெட்ரோலிய தொழில்கள் லாபம் தரும். நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகும் என்பதால் தொழிலை விருத்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். அரசு பணியார்களுக்கு இது அதிர்ஷ்டக்காலமாக இருக்கும். தனியார் நிறுவனத்தில் பணி புரிபவர்களில் சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவர். . இக்காலம் உங்களுக்கு எல்லா வகையிலும் யோகமான காலம் என்பதால் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அதனால் லாப நிலையை அடைவீர்கள்

பரிகாரம்: திருவெண்காட்டில்  அருள்புரியும் புதபகவானை மனதில் எண்ணி செயல்படுவதுடன், ஒருமுறை திருவெண்காடு சென்றுவர நல்ல மாற்றம் உண்டாகும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு ... மேலும்
 
temple news
கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar