Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புட்லூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லாண்டியம்மன் தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2012
11:07

மோகனூர்: வாழவந்தி செல்லாண்டியம்மன் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தியில், செல்லாண்டியம்மன் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் தூக்குத் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, கடந்த 18ம் தேதி காலை 7 மணிக்கு, அம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் வைக்கப்பட்டது.தொடர்ந்து, காலை 10 மணிக்கு எல்லை உடைக்கம் நிகழ்ச்சி நடந்தது. அதில், அம்மனுக்கு வெட்டப்படும் ஆட்டு ரத்தத்தை பாத்திரத்தில் பிடித்து, எல்லைக்கு கொண்டு சென்று, பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து ஆலமரத்தின் மீது வீசி வந்தனர்.அதையடுத்து, நேற்று முன்தினம் காலை 8 ம ணிக்கு, ஊமைப்புலி குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. அதில், கோவில் முன் நின்றிருந்த ஆட்டின் வயிற்றை கத்தியால் கீறி கல்லீரலை எடுத்து, பூசாரி வாயில் கவ்வியபடி எடுத்துச் சென்று கிணற்றில் விட்டு வந்தார். மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தூக்குத்தேரில் ஸ்வாமி எழுந்தருளினார். பக்தர்கள் தேரை, 18 கிராமங்களுக்கும் எடுத்துச் சென்றனர்.அங்கு, பக்தர்கள் மாவிளக்கு வைத்து பூஜை செய்து ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar