Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் ... உத்தரகோசமங்கை வராஹி அம்மன் கோயிலில் பஞ்சமி வழிபாடு உத்தரகோசமங்கை வராஹி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட கோயில்களில் அன்னதான திட்டத்திற்கு ரூ. 3500 ஆக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2022
05:04

சிவகாசி: இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கோயில்களில் அன்னதான திட்டத்திற்கு ரூ. 2500 லிருந்து ரூ. 3500 ஆக உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அனைத்து கோயில்களிலும் அன்னதானத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின்படி தினமும் 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்படும். அன்னதான திட்டத்திற்கு என தனி நபர்கள் நன்கொடை கொடுக்கும் பட்சத்தில் அவர்களின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும். இதற்கான தொகை ரூ. 2500 ஆக இருந்தது. நன்கொடை கொடுப்பவர் ஆண்டில் தனக்கு இந்த நாள் தான் வேண்டும் என நினைக்கும் பட்சத்தில் ரூ. 25 ஆயிரம் முன் பணமாக கட்ட வேண்டும். இந்நிலையில் ஏப். 1 முதல் அன்னதான திட்டத்திற்கு ரூ. 3500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேவைப்படும் நாளில் அன்னதானம் வழங்குவதற்கு ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் 2022 பிப். 8 ல் அறிவித்திருந்தார். பெரும்பாலான கோயில்களில் முன்பணம் பெற்றிருந்ததால் ஏப். 1 முதல் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அந்தந்த கோயில்களில் வைத்துள்ளனர். அதன்படி சிவகாசி பெருமாள் கோயில், சிவன் கோயிலில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar