Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிப்பூரம்: சூடிக்கொடுத்த ... நமது கோவில் சிறப்பு நிகழ்ச்சி: திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு! நமது கோவில் சிறப்பு நிகழ்ச்சி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2012
10:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவம் நேற்று, அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில், நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, காலை 6.30 மணி அளவில், உண்ணாமுலையம்மன் அலங்கரிக்கப்பட்டு, அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடி மரம் முன், பராசக்தி அம்மன் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, மேளதாளத்துடன் காலை 6.50 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அப்போது, பக்தர்கள், "அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, மாலை பெரிய நந்தி அருகே உள்ள வளைகாப்பு மண்டபத்தில், பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு அம்மன் சன்னதி முன், தீமிதி விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து வழிபட்டனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் காலையிலும், இரவிலும், மேளதாளம் முழங்க, பராசக்தி அம்மன் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar