Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ... காலடி கிருஷ்ணர் கோயிலில் தங்க நெல்லிக்கனி அபிஷேகம் காலடி கிருஷ்ணர் கோயிலில் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2022
07:04

மயிலாடுதுறை : திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம்  நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி, அம்பாளை வழிப்பட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலின் சித்திரைதிருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் 14 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் முக்கிய விழாவான இன்று அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதையொட்டி சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் முன் மண்டபத்திற்கு எழுந்தருளினார் மாலை மாற்று உற்சவத்துடன் சீர்வரிசை எடுத்துவர தருமபுரம் ஆதீனம் கட்டளை  ஸ்ரீமத்  சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள்     முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பூஜைகளை ராஜா, ராமலிங்கம், கணேஷ், மகேஷ், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட சிவாச்சாரியார்கள்  செய்துவைத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 11ஆம் தேதி சகோபர வீதி உலாவும், 12 ஆம் தேதி  இரவு எமன் சம்காரமும், 14-ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் திருவிழாவும், 16ஆம் தேதி தீர்த்தவாரியும், 18ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கேஷியர் ஸ்ரீராம் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar