Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை மகா காளியம்மன் ... சேத்தாண்டி வேடமணிந்து சிறுவர்கள் நேத்திகடன் சேத்தாண்டி வேடமணிந்து சிறுவர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஸ்ரீராமநவமி: ராம ஜயம் ஸ்ரீராம ஜயம்! நம்பியவருக்கு ஏது பயம்!
எழுத்தின் அளவு:
இன்று ஸ்ரீராமநவமி: ராம ஜயம் ஸ்ரீராம ஜயம்! நம்பியவருக்கு ஏது பயம்!

பதிவு செய்த நாள்

10 ஏப்
2022
08:04

பங்குனி மாத புனர்பூச நட்சத்திரமான இன்று ஸ்ரீராமநவமி கொண்டாடுகிறோம்.
இந்நாளில் விரதமிருப்பவர்கள் காலையில் பூஜையறையில் கோலமிட்டு ராமர் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து துளசி மாலை சூட்டுங்கள். விளக்கேற்றி ராம அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் ஜபியுங்கள். ராம ராம ராம என்னும் நாமத்தையும் 108 முறை சொல்லலாம்.
சுண்டல், பாயசம், பானகம், வடை, நீர் மோர், பஞ்சாமிர் தத்தையும் படையுங்கள்.

கம்பர், துளசி ராமாயணத்தில் ராமர் பிறப்பை படிக்கலாம். 1,008 முறை ஸ்ரீராம ஜயம் எழுதலாம். மாலையில் கோவில் வழிபாடு அவசியம். பானகம், நீர் மோர், விசிறி தானம் செய்யலாம். ஸ்ரீராமரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

நன்மை தரும் பாட்டு

கம்பராமாயணத்திலுள்ள
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென்
றிரண்டெழுத்தினால்
என்ற பாடலை ஸ்ரீராமநவமியன்று பாட வேண்டும்.ராமனின் பெயரைச் சொன்னால், நன்மையும், செல்வ வளமும் உண்டாகும்; தீமையும், பாவமும் அழிந்து போகும். பிறப்பு,
இறப்பும் இரண்டும் நீங்கி பிறவிச் சுழலில்இருந்து விடுபடலாம் என்பது இந்தப் பாடலின் பொருள்.

பாசமலர்கள் பூக்கட்டும்

பெற்றோர் காலத்திற்குப் பின், சகோதரர்களின் ஒற்றுமை குறைந்து விடும். ஆனால் பழைய நினைவுகள் மனதிற்குள் வந்து போகும். மீண்டும் சேர மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு உண்டாகும்.

சகோதர ஒற்றுமை நிலைக்க விரும்பினால், பட்டாபிேஷக ராமர், பரதர், லட்சுமணர், சத்ருக்கன் படத்தை பூஜையறையில் வைத்து வழிபடுங்கள். ஒவ்வொரு மாதமும் புனர்பூசத்தன்று காலையில் மட்டும் விரதமிருந்து மாலையில் விளக்கேற்றி, 108 முறை ஸ்ரீராம ஜயம் எழுதுங்கள். அதன்பின் ராமர் அல்லது பெருமாள் கோவிலில் சுவாமிக்கு துளசி சாத்தி மூன்று முறை சன்னதியை வலம் வாருங்கள். ராமசகோதரர்களின் ஆசியால் குடும்பத்தில் பாசமலர் பூக்கும்.

ஆசை இல்லாத அயோத்தி

பணம் பந்தியிலே; குணம் குப்பையிலே என்றொரு பழமொழி உண்டு. ஆனால், ராமர் ஆட்சி செய்த அயோத்தியில் நடந்த சம்பவம் வியப்பாக இருக்கிறது.

அயோத்தியில் வாழ்ந்த நவரத்தின வியாபாரியின் மகள், தன் திருமணத்திற்கு வரும்படி மகாராணி சீதைக்கு அழைப்பு விடுத்தாள். சம்மதித்த சீதை முத்துமாலை ஒன்றை பரிசளித்தாள். ஏராளமான நகைகள் தன்னிடம் இருப்பதால், யாராவது ஏழைகள் எடுத்துக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் அரண்மனை வாசலில் முத்துமாலையை விட்டுச் சென்றாள் அந்த பெண். ஆசையே இல்லாத அயோத்தி மக்கள் அதை தொடக் கூட விரும்பவில்லை.

நாளடைவில் வைர மாலை மண்ணுக்குள் புதைந்தது. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத
அயோத்திவாசியாக நாம் என்று மாறுவோமோ...

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar