Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருமலையில் வி.ஐ.பி., பிரேக் தரிசனம் ... கடைக்குள் ஒளிந்திருக்கும் சிவன் கோவில்: ஆதாரங்களை தேடும் அறநிலையத் துறை கடைக்குள் ஒளிந்திருக்கும் சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குத்தாலம் கோவிலில் பூத்துக் குலுங்கியது உத்தால மலர்
எழுத்தின் அளவு:
குத்தாலம் கோவிலில் பூத்துக் குலுங்கியது உத்தால மலர்

பதிவு செய்த நாள்

13 ஏப்
2022
11:04

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய உத்தால மலர் பூத்துக்குலுங்கியதை பக்தர்கள் ஆர்வமுடன் தரிசித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உக்தவேதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். இத்தலத்தில் சுவாமி, அம்பாளை வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கி திருமணம் கைகூடும். இத்தலத்தில் சிவபெருமான், பார்வதி தேவியைத் திருமணம் செய்து கொள்வதற்காக கைலாயத்தில் இருந்து வந்த போது அவருக்கு நிழலாக உத்தால மரம் வந்துள்ளது.  திருக்கல்யாணம் முடிந்து சுவாமி, அம்பாள் கைலாயம் செல்லும் போது சுவாமி இத்தளத்தில் உத்தால மரத்தையும், தனது பாதரட்சையையும்  விட்டுச் சென்றதாக வரலாறு கூறுகிறது. 1500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் இன்றளவும் இந்த மரம் பசுமையுடன் காணப்படுகிறது. இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாத கடைசியிலும், சித்திரைமாத முதல் வாரத்திலும் மலர்கள் பூப்பது வழக்கம். இவ்வாண்டு நேற்று இத்தலத்தில் உள்ள உத்தால மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கியது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து பார்த்து தரிசித்து சென்றனர். இந்த உத்தாலம் மலர் ஐந்து  விதமான இதழ்களையும், ஐந்து வகையான சுவையையும் உடையது. மருத்துவ குணம் வாய்ந்த இந்த மலர் மனிதர்கள் உண்ண உகந்தது. இந்த உத்தால மரம் உலகில் வேறு எங்கும் இல்லாதது தனிச் சிறப்பு வாய்ந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar