Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சித்தர் பீட நந்திக்கு கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி மேலசங்கரன் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2012
10:07

தென்காசி: தென்காசி மேலசங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தென்காசி காசிவிசுவநாதர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட மேலசங்கரன்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று காலை 6.10 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின் கொடிமரத்தில் கொடிபட்டம் ஏற்றப்பட்டு கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகமும், சிறப்பு அலங்கார, தீபாராதனையும் நடந்தது. கோமதி அம்பாள் பூங்கோயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து இன்று (23ம் தேதி) காமதேனு வாகனத்திலும், 24ம் தேதி சிம்ம வாகனத்திலும், 25ம் தேதி ரிஷப வாகனத்திலும், 26ம் தேதி பூங்கோயில் வாகனத்திலும், 27ம் தேதி அன்ன வாகனத்திலும், 28ம் தேதி புஷ்ப பல்லக்கிலும், 29ம் தேதி கிளி வாகனத்திலும், 30ம் தேதி கனக பல்லக்கிலும், 31ம் தேதி ரிஷப வாகனத்திலும் அம்பாள் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். விழாவின் 11ம் நாளான ஆகஸ்ட் 1ம் தேதி காலையில் அம்பாள் தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். மாலை 5.40 மணிக்கு மேல் 6.40 மணிக்குள் தெற்குரத வீதியில் கோமதி அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் தபசு காட்சியும், தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருவீதிஉலா வருதலும், இரவு காட்சியும் நடக்கிறது. 2ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar