Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாத்துார் சிதம்பரேஸ்வரர் கோவில் ... சாத்தனூர் அய்யனார் கோவில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவிலில் மராமத்து பணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2022
04:04

சென்னை: கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரது சுற்றறிக்கை:அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சில கோவில்களில், 12 ஆண்டுகள் முடிந்தும் திருப்பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளன. கும்பாபிஷேகம் நடந்து சில ஆண்டுகள் ஆன பல கோவில்களும் பொலிவிழந்து காணப்படுகின்றன. அதுபோன்று உள்ள கோவில்களில், திருவிழாக்களின்போது விமானம், கோபுரம் நீங்கலாக, பாலாலயம் செய்யாமல் கோவில் முன் மண்டபம், அர்த்த, மகா மண்டபம், மடப்பள்ளி, மதில்சுவர் உள்ளிட்டவற்றை, குறிப்பிட்ட கால இடைவெளியில் பழுதுபார்த்து புதுப்பிக்க வேண்டும். இரும்புக் கதவுகளுக்கு வர்ணம் தீட்டுதல், சிதைவுற்ற பகுதிகளை சரிசெய்தல், மரக் கதவுகளை பழமை மாறாமல் புதுப்பித்தல் போன்ற பணிகளை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.இப்பணிகளை குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது கோவில் பொலிவிழந்து காணப்பட்டாலோ, கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிவடைய வேண்டும் என காத்திருக்காமல், உடனே மேற்கொள்ள வேண்டும். இதற்கான கால இடைவெளி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என வரையறுக்கப்படுகிறது.இவ்வாறு குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar