பதிவு செய்த நாள்
25
ஜூலை
2012
11:07
திருச்செந்தூர்: திருச்செந்தூர் மேலத்தெரு யாதவர் சமுதாய சுடலைமாடசுவாமி கோயில் கொடைவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுடலைமாடசுவாமி கோயில் ஆடித் திருவிழா கடந்த 23ம் தேதி துவங்கியது. கொடை விழாவை முன்னிட்டு காலை 5.30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனையும் தொடர்ந்து சுவா மி நகர்வலம் சுற்றி வரும் நிகழ்ச்சியும் நடந்தது. பகல் 12 மணிக்கும், இரவு 12 மணிக்கும் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. சுவாமிக்கு பக்தர்கள் வாழைதார் கட்டி பிரார்த்தனை நிறைவேற்றினர். இன்று அதிகாலை 4 மணி க்கு சுவாமிக்கு படைப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந் து காலை 7 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கொடை விழாவில் சரண்யா ரெடிமேட்ஸ், மந்திரம், நகர யாதவ வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன்யாதவ், துணைத்தலைவர் ஆறு முகம் செயலாளர் மயில்வீடு சிவசுப்பிரமணியன், துணைச் செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் கல்லாத்தான், திருச்செந்தூர் டவுன் பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு, திருச்செந்தூர் முருகன், கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், லட்சுமி சைக்கிள் மார்ட் சுடலை, ஹோட்டல் அர்ச்சனா கிட்டு, விவேகா கன்ஸ்ட்ரக்சன் நாராயணன், வெங்கடேசன், ஸ்ரீவீரபாகு மஹால் வீரபாகு யாதவ், அதிமுக.,ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வினோத், அதிமுக., பேச்சாளர் அர்ச்சுனன் யாதவ், தேமுதிக.,ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நகர அவைத் தலைவர் ராமன், நகர பொருளாளர் வீரமணி, நகர துணைச் செயலாளர் முருகன், பாஸ்கர், பந்தல் நிலையம் வேம்பு, லெஷ்மி சூ மார்ட் பன்னீர்செல்வம், கண்ணன், சிவம் டீ ஸ்டால் அந்தோணிராஜ், வேலாயுதம், முத்து, செந்தூர் ப்ளவர் டெக்கரேஷன் குமார், அனில் ரெடிமேட் நட்டார், கிட்ஸ் ரெடிமேட் ஐயாக்குட்டி, எல். எல்.ஜூவல்லர்ஸ் லெட்சுமணன், நம்பி, கூல் மாஸ்டர் ஏர்கான்ஸ் லைப் கம்பெனி வெங்கடேஷ், ராஜ், ராஜ்கண்ணா டிராவல்ஸ் ராஜ் கண்ணன், தேவஸ்தான கேண்டீன் வீரக்கண், ரெங்கசாமி, ராஜேஸ்வரன், சாந்தி பேக்கரி ராதாகிருஷ்ணன், ரமேஷ், சதீஷ், எல்.ஜே.கம்ப்யூட்டர் சுடலை, மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் நம்பியாதவ் தலைமையில் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.