Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ... பழமையான பக்தவச்சல பெருமாள் தேர் பராமரிக்க பக்தர்கள் வேண்டுகோள் பழமையான பக்தவச்சல பெருமாள் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
வைத்தீஸ்வரன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

26 ஏப்
2022
10:04

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோயிலில் லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் தேவார பாடல் பெற்ற ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இத்தலத்தில் செல்வமுத்துக்குமர சுவாமியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமகுடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது  வழிபாடு செய்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் வழிபாடு தடைபட்ட நிலையில் இந்தாண்டு திரளான மக்கள் வழிபாடு செய்ய வந்துள்ளனரே. நகரத்தார் மக்கள் விரதமிருந்து சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை  புறப்படுட்டு நேற்று வைதீஸ்வரன் கோவில் ஊர் எல்லையை வந்தடைந்தனர் கூண்டு வண்டியில் தங்களுக்கு உபயோகிக்கும் பொருட்கள் மற்றும் வழிபாட்டிற்கு தேவையான பொருட்களையும் ஏற்றி வர அவற்றை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பின்தொடர்ந்து வந்தனர். அவர்களுக்கு கோவில் மற்றும் வைதீஸ்வரன் கோவில் மக்கள் வரவேற்பு அளித்தனர் அவர்களுக்கு உணவு தண்ணீர் வழங்கப்பட்டது. இரண்டாவது செவ்வாய் கிழமையான இன்று அதிகாலை வைத்தீஸ்வரன்கோவில் எல்லையில் இருந்து புறப்பட்ட நகரத்தார் மக்கள் தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு   ஸ்ரீதையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி   சீர்வரிசை எடுத்துச்சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்வதுடன் சுவாமி மற்றும் செல்வ முத்துக்குமார சுவாமி அங்காரன் ஆகிய சன்னதிகளிலும் வழிபாடு நடத்தினர் பின்னர் அவர்கள் தங்களுக்கு வழித்துணையாக எடுத்துவந்த மங்கல குச்சியினை கொடிமரத்திற்கு அருகில் விட்டதுடன் மறு வேண்டுதலுக்காக அங்கிருந்து வேறு ஒரு குச்சியை எடுத்து சென்றனர். நகரத்தார் வழிபாட்டை முன்னிட்டு வைதீஸ்வரன் கோவில் முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் சொந்த ஊர் திரும்பிச் செல்வதற்கு வசதியாக  சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar