Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவபுரிபட்டியில் பிரதோஷ வழிபாடு கோவில்களில் கட்டணம் செலுத்த மின்னணு கட்டண சீட்டு கருவிகள் வழங்கல் கோவில்களில் கட்டணம் செலுத்த மின்னணு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மாவுக்கு கோவில் கட்டிய மகன்கள்: அபிஷேகம் செய்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அம்மாவுக்கு கோவில் கட்டிய மகன்கள்: அபிஷேகம் செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

29 ஏப்
2022
11:04

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, இறந்த அம்மாவுக்கு மகன்கள் கோவில் கட்டி கும்பிட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே நாவல்பட்டி காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி, 82. இவரது மனைவி அலமேலு, 72; கடந்த, 2019ம் ஆண்டு மாரடைப்பால் இறந்துவிட்டார். இவர்களுக்கு, முருகேசன்,62, பச்சமுத்து,58, என்ற மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். முருகேசன் வக்கீலாக உள்ளார். பச்சமுத்து விவசாயம் பார்த்து வருகிறார். மகள்கள் மூன்று பேருக்கும் திருமணமாகிவிட்டது. அம்மா மீது மிகுந்த பாசம் கொண்ட மகன்கள் இருவரும், அவர் இறந்ததில் இருந்து மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். அம்மாவின் பிரிவு தாங்க முடியாமல், கோவில், கோவிலாக சென்று வழிபட்டு வந்தனர். ஆனாலும் மனம் ஆறுதல் அடையவில்லை. இந்நிலையில் தங்களது விவசாய நிலத்திலேயே அம்மாவுக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர். விவசாய நிலத்திலேயே கருங்கற்களால் கோவில் கட்டி, கருவறையில் இரண்டே முக்கால் அடி உயரத்தில் அலமேலுவுக்கு சிலை வைத்து விட்டனர். தற்போது, தினந்தோறும் பால் அபிஷேகம், ஆராதனை செய்து வழிபட்டு வருகின்றனர். இதுகுறித்து முருகேசன், பச்சமுத்து ஆகியோர் கூறுகையில், ‘அம்மாவை மறக்க முடியவில்லை. அதனால் அம்மாவை தினமும் பார்க்க, அவருக்கு கோவில் கட்டி வழிபட்டு வருகிறோம்’ என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar