Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோமலிங்க சுவாமி கோயிலில் பிரதோஷ பூஜை விரதமிருந்து மண் குதிரை சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் விரதமிருந்து மண் குதிரை சுமந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2022
05:04

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 7:00 மணி முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்கின்றனரா என பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் சோதனை செய்தனர். மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டநிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்து திரும்பினர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக பக்தர்கள் இரவு தங்குவதை தவிர்த்து சுவாமி தரிசனம் செய்தவுடன் அடிவாரம் திரும்புமாறு வனத்துறையினர் பக்தர்களுக்கு அறிவுறுத்தினர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீஸ் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar