Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாலட்சுமிக்கு விருப்பமானவை : ... குபேரனைப் போல வாழ ஆசையா... குபேரனைப் போல வாழ ஆசையா...
முதல் பக்கம் » துளிகள்
கஷ்டத்துக்கெல்லாம் விடிவு காலம் வந்தாச்சு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2022
12:05

ரோஜா செடியில் முள்தான் அதிகம். பூக்களோ குறைவு. அதுபோல்தான் தற்போது பலரது வாழ்க்கையில் முட்களாக பல பிரச்னைகள் முளைக்கின்றன. முட்களை ஈஸியாக எடுத்துவிடலாம். பிரச்னைகளை தீர்க்க முடியுமா... முடியும் என்கிறார் பகவதி அம்மன். பகவதி அம்மன் என்றவுடன் கேரளா வரை செல்ல வேண்டுமே என நினைக்க வேண்டாம். சென்னை செனாய் நகரில் உங்களுக்காக காத்திருக்கிறாள். வாருங்கள்.
யாகங்களில் உயர்ந்தது அஸ்வமேதம். பெண்களில் உயர்ந்தவர் சீதை. அதுபோல யந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்ரம். அதற்கு வடிவம் கொடுத்தால் மஹாமேரு. அப்படிப்பட்ட இடத்தில் அருள்பாலிக்கிறாள் பகவதி.  
கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் அம்மனின் தரிசனம் நமக்கு கிடைத்துவிடும். அனைத்து தெய்வங்களும் தனது வலக்கையை மேல் நோக்கி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு பகவதி தனது வலக்கையை கீழ்நோக்கி காட்டி அருள்கொடுக்கிறாள். பேரழகியாக காட்சி தரும் பகவதி, உள்ளங்கை அளவு விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலிக்கிறாள். அம்மனின் சிரிப்பை பார்த்தாலே பிரச்னைகள் எல்லாம் கரைந்துவிடும்.  
அம்மனை பார்த்தபின் வலது புறத்தில் குபேர சஹஸ்ரலிங்கேஸ்வரரை பார்க்க முடியும். குபேரனின் அம்சமான இவரை வழிபட்டால் பணப்பிரச்னையே வராது.
இப்படி கோயிலின் அமைப்பு ஒருபுறம் இருக்க.. பிரச்னைகளை தீர்க்கும் பரிகாரத்தை பார்த்துவிடலாம் வாருங்கள். பரிகாரம் என்னவோ சிறியதுதான். ஆனால் அதற்கு கிடைக்கும் பலனோ பெரியது.
ஒன்றும் இல்லை. ஒரு தட்டில் 9 எலுமிச்சை விளக்கை ஏற்றுங்கள். அம்மனை ஒன்பதுமுறை சுற்றிவாருங்கள். இப்படி தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமையில் செய்யுங்கள். பிரச்னை எப்படி துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓடுகிறது என்பதை பிறகு பாருங்கள். இப்படி செய்து பலன் அடைந்தவர்கள் தங்களால் இயன்ற அளவில் அன்னதானம் செய்கிறார்கள். ஆங்கில மாத முதல் வெள்ளியன்று திருமணமாகாத பெண்கள் இங்கு திருவிளக்கு பூஜையும், கூட்டுப்பிராரத்தனையும் செய்கிறார்கள். இப்படி தொடர்ந்து ஒருவர் 9 வாரம் செய்தால் திருமணத்தடை நீங்கும்.
இங்கு நவகிரகங்கள் தங்களின் மனைவிகளோடு காட்சி தருகின்றனர்.  

எப்படி செல்வது: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ., 

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar