Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்வியில் சிறக்க முக்தீஸ்வரர் ... சபரிமலை மற்றும் குருவாயூர் கோயில்களுக்கு ஹெலிகாப்டர் சேவை! சபரிமலை மற்றும் குருவாயூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசு செலவில் கோவில்களில் யாகம்: கொட்டித் தீர்த்தது மழை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2012
10:07

கர்நாடகாவில் மழை வேண்டி, அரசு சார்பில், 34 ஆயிரம் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூஜையின் பலனாக, தென் கர்நாடகா உட்பட மூன்று மாவட்டங்களில் பலத்த மழை பெய்து, வெள்ளம் கரை புறண்டு ஓடுகிறது. பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் மழை பெய்தது. கர்நாடகாவில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மழை இல்லாமல், மாநிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே, 123 தாலுகாக்கள் வறட்சி தாலுகா என, அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், 23 தாலுகாவை வறட்சியால் பாதிக்கப்பட்ட தாலுகாவாக கூடுதலாக மாநில அரசு அறிவித்தது.

சிறப்பு பூஜை: வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும், ஜூன், ஜூலை மாதங்களில் பருவ மழை பெய்யும். இந்தாண்டு கோடை மழையும் இல்லை, பருவ மழை பருவம் முடியும் நிலையிலும் மழை பெய்ய வில்லை.இதையடுத்து, கர்நாடகா அறநிலையத் துறை அமைச்சர் சீனிவாஸ் பூஜாரி, மாநிலம் முழுவதுமுள்ள, 34 ஆயிரம் கோவில்களில், மழை வேண்டி சிறப்பு பூஜை செய்ய முடிவு செய்தார். நேற்று முதல் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அரசு சுற்றறிக்கை: மழை வேண்டி சிறப்பு பூஜைக்கு, கோவில்களுக்கு தலா, 5,000 ரூபாய் காசோலையுடன், கோவில்களில் காலை முதல் மாலை வரை நடத்த வேண்டிய பூஜைகள், ஹோமங்கள் குறித்து விளக்கத்துடன் அனைத்து கோவில்களுக்கும் ஒரு சுற்றிக்கை அனுப்பப்பட்டது. இதற்காக மாநில அரசு, 17.5 கோடி ரூபாய் செலவு செய்தது. இதற்கு, சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தனர்."இப்பணத்தை வைத்து, தண்ணீர் திட்டம் அல்லது வேறு எதாவது திட்டம் செயல்படுத்தியிருக்கலாம். இது தேவையில்லாத செலவு என, கூறினர். நேற்று காலை முதல் மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் தொடங்கியது.

34 ஆயிரம் கோவில்களில்...: மாநிலத்திலுள்ள, 34 ஆயிரம் கோவில்களில் சிறப்பு பூஜை ஆரம்பமானது. சுவாமியை அலங்கரித்து, பூக்களால் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மழைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. சில கோவில்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் நேற்று காலை சிவாச்சார்யார்கள் கலசத்தில் நீர் எடுத்து, ஊர்வலமாக சென்று, சாமுண்டீ அம்மனுக்கு அபிஷேகம் செய்து, பின்னர் மழைக்காக சிறப்பு பூஜை செய்தனர். அதே போன்று, நஞ்சன்கோடு நஞ்சுண்டேஸ்வரா, மங்களூரு குக்கே சுப்பிரமணியா கோவில், ஹலசூரு சோமேஸ்வரர் கோவில் உட்பட ஹாசன், சிக்மகளூரு, தாவணகரே, பீதர், கொப்பால், குல்பர்கா, ஷிமோகா உட்பட மாநிலத்தில் அனைத்து கோவில்களிலும் மழை வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

மழை கொட்டியது: நேற்று முன்தினம் மாலையிலிருந்து, மாநிலம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. பெங்களூருவில் நேற்று காலை 11 மணியளவில் இருந்து லேசான மழை பெய்தது. தென் கர்நாடகா மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. பல மாவட்டங்களில் வெள்ளம் கரை புறண்டு ஓடியது.அதே போன்று தாவணகரே, குடகு உட்பட மூன்று மாவட்டங்களிலும் அதிக மழை பெய்தது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மூன்று மாவட்டங்களில் ரயில் சேவையை நிறுத்தும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது.மேல் பத்ரா அணைகட்டு பகுதியிலும் பலத்த மழை பெய்தது. சிக்மகளூரு, ஷிமோகா, மடிகேரி, தாவணகரே, சோமவார்பேட், வீராஜ்பேட், சக்லேஷ்புர், மங்களூரு உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மழைக்காக சிறப்பு பூஜை செய்ததால், மழை வந்ததாக பா.ஜ., தலைவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar