Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ... மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண வழிபாடு மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

12 மே
2022
10:05

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டினப்பிரவேசம் திருவிழா,  ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து ஜபம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள்  கொடிமரத்திற்கு எழுந்தருளினார் அதனை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கோயில் கொடி மரத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18ஆம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 20ம் தேதி பஞ்சமூர்த்திகள் திருத்தேர் உற்சவமும், 21ஆம் தேதி காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மேலும் ஆதீன மடத்தில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை பெருவிழா 10 நாள் உற்சவமாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருநெறிய தெய்வத்தமிழ் மாநாடு நடைபெற உள்ளது.பல்வேறு தமிழ் சைவம் சார்ந்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. விழா நிறைவாக 11ம் நாள் திருவிழாவாக 22 ஆம் தேதி ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் காட்சியும் நடைபெறுகிறது. இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar